தொகுதி பங்கீடு முடிந்தது..! திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்..? வெளியான லிஸ்ட்..!

stalin dmk

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. 


தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஆளுங்கட்சியான தி.மு.க மெகா கூட்டணியை அமைத்துள்ளது.. 21 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.. அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, வல்லரசு பார்வர்டு பிளாக், ஆதி தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, புதிய திராவிடர் கழகம், திராவிட வெற்றிக்கழகம், கொங்கு இளைஞர் பேரவை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன..

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்..?

திமுக – 164

காங்கிரஸ் – 28

தேமுதிக – 10

விசிக – 8

இந்திய கம்யூனிஸ்ட் -5

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 5

மதிமுக – 4

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 2

மனிதநேய மக்கள் கட்சி – 2

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 2

மனிதநேய ஜனநாயக கட்சி – 1

எஸ்டிபிஐ – 1

முக்கலத்தோர் புலிப்படை – 1

தமிழர் தேசம் கட்சி -1

எனவே 234 தொகுதிகளிலும் பங்கீடு நடந்துவிட்டது.. இவர்களில் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியில்லை என்று கூறிவிட்டது.. மேலும் திமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.. அது போல் மதிமுகவும் 4 தொகுதிகளில் 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன..

மொத்தம் 178 உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்தாலும், எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.. மேலும் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யும் பணியும் நடந்து வருகிறது.. இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது..

Read More : பாஜகவின் 27 வேட்பாளர்கள் யார் யார்..? வெளியானது உத்தேச பட்டியல்.. அண்ணாமலை பெயர் இல்லை..!

RUPA

Next Post

முட்டைகளுடன் இந்த 5 உணவுகளை, தவறுதலாகக் கூட சாப்பிடாதீர்கள்..! உங்களுக்கு தான் சிக்கல்..!

Fri Mar 27 , 2026
நாம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினாலும் சரி, அல்லது நம் உடலுக்குத் தேவையான சரியான அளவிலான வலிமையைப் பெற விரும்பினாலும் சரி, நாம் தினமும் உண்ணும் சிறந்த உணவுகளின் வரிசையில் முட்டைகள் முதலிடத்தில் நிற்கின்றன. காலை உணவாக இருந்தாலும் சரி, மதிய உணவாக இருந்தாலும் சரி, தட்டில் முட்டைகள் இடம்பெறுவது ஒரு தனித்துவமான திருப்தியை அளிக்கிறது. இருப்பினும், முட்டைகளில் பல ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்திருந்தாலும், அவற்றைச் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களுடன் […]
Egg 2026

You May Like