தவெக தலைவரும் முதல்வருமான விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. அவரது பிறந்தநாளை தவெகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.. பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..
அந்த வகையில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்க பதிவில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்! தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் – உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
தமிழக முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..



