இரட்டை இலை சின்னத்தில் களம் காணும் ஐஜேகே வேட்பாளர்கள் யார் யார்..? வெளியானது அறிவிப்பு..!

IJK candidates

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன..


இந்த கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும், தமாகாவுக்கு 5 தொகுதிகளும், ஐஜேகேவுக்கு 2 தொகுதிகளும், புரட்சி பாரதம், தமிழக முன்னேற்றக் கழகம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.. அதன்படி ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய தொகுதிகளில் தமாகா போட்டியிடுகிறது..

27 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.. முழுமையான பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.. பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.. அதே போல் தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் பாரிவேந்தர் அறிவித்தார்.. இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்களை அவர் அறிவித்தார்.. அதன்படி பல்லாவரம் தொகுதியில் வழக்கறிஞர் வெங்கடேஷ், குன்னம் தொகுதியில் சரண்யா அன்பழகன் போட்டியிடுகின்றனர்.. இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் இருவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்..

Read More : “விஜய் சரியான நேரத்திற்கு வர வேண்டும்..” தவெக நிர்வாகிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் அட்வைஸ்..!

RUPA

Next Post

விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு புகார்..! தவெக அபாயகரமான கட்சி என ஆவேசம்..!

Fri Mar 27 , 2026
துப்பறிவாளன், இரும்புத்திரை, நட்பே துணை போன்ற படங்களில்  துணை வேடங்களில் நடித்தவர் ரஞ்சனா நாச்சியார்.. பாஜகவில் இருந்த இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தவெகவில் இணைந்தார்.. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய்யை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.. தனது விவாகரத்து குறித்து பேசிய விஜய் அதெல்லாம் ஒர்த் இல்லை என்று பேசியிருந்தார்.. 27 ஆண்டுகள் குடும்பம் நடத்திய மனைவி ஒர்த்தே இல்லை என்றூ விஜய் கூறியதை […]
Ranjana Nachiyar Vijay

You May Like