உங்களுக்கு இதயநோய் வரக்கூடாதா? அப்படினா இந்த 5 விஷயங்களை எப்போதும் மறக்காதீங்க..!! அமெரிக்கா டாக்டர் கொடுத்த டிப்ஸ்..!!

heart attack 1

உலகளவில் நிகழும் அதிகபட்ச உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக விளங்குவது இதய நோய்களே ஆகும். உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவு பழக்கவழக்கங்களே இதற்கு வழிவகுக்கின்றன. இருப்பினும், வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட கார்டியோவாஸ்குலர் பாதிப்புகளில் சுமார் 80 சதவீதத்தை எளிதாக தடுக்க முடியும் என்று உலக இதய கூட்டமைப்பு (WHF) சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவர் டாக்டர் வாஸ் (Dr. Vass) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாரடைப்பை தடுக்கும் 5 அத்தியாவசிய பழக்கங்கள் குறித்து விரிவாக பகிர்ந்துள்ளார்.


உணவுக்கு பின் நடைபயிற்சி:

ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னரும் குறைந்தது 10 நிமிடங்கள் நடப்பது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் இதய தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளான ரத்த சர்க்கரை மற்றும் உடல் அழற்சி (வீக்கம்) கணிசமாக குறைகிறது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்:

சால்மன் போன்ற ஆரோக்கியமான மீன்கள் அல்லது உயர்தர ஒமேகா-3 சப்ளிமெண்ட்களை உணவில் சேர்ப்பது அவசியமாகும். இது உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து, ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை தணிப்பதுடன் தமனிகள் கடினமாவதை தடுக்கிறது.

தினசரி 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம்:

ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஒரு இரவுக்கு ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் 200 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று மருத்துவர் எச்சரிக்கிறார். எனவே தினசரி 8 மணி நேர நிம்மதியான தூக்கத்தை இலக்காக கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல்:

பிளாஸ்டிக் பொருட்கள் வெளியிடும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் ஹார்மோன் சமநிலையை குலைத்து இதயத்திற்கு ஆபத்தை உண்டாக்கும். பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவை சூடுபடுத்துவதை முற்றிலும் தவிர்த்து, கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்; சுத்திகரிக்கப்பட்ட நீரையே பருக வேண்டும்.

துல்லியமான ரத்த பரிசோதனைகள்:

வழக்கமான கெட்ட கொழுப்பை (LDL) மட்டும் பரிசோதிக்காமல், அப்போலிபோ புரோட்டீன் பி (ApoB), லிப்போபுரோட்டீன் ஏ [Lp(a)], ஹோமோசிஸ்டீன் மற்றும் hs-CRP ஆகிய ரத்த பரிசோதனைகளை தவறாமல் செய்ய வேண்டும். இவை ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை மிக துல்லியமாக முன்கூட்டியே எச்சரிக்க உதவுகின்றன.

Read More : ஊழல் செய்தால் இதுதான் கதி..!! பாரபட்சமே பார்க்க மாட்டோம்..!! அமைச்சர் நிர்மல்குமார் எச்சரிக்கை..!!

Next Post

சொத்தை பல் வலியை உடனே போக்கும் அற்புத வைத்தியம்..! தினமும் பராமரிப்பது எப்படி..?

Mon Sep 7 , 2026
முறையாக பல் துலக்காதது மற்றும் அதிகளவு இனிப்பு பண்டங்களை உண்பது போன்றவற்றால் பற்களில் பாக்டீரியாக்கள் தங்கி அமிலத்தை உருவாக்குகின்றன. இந்த அமிலம் பற்களை சிறுகச் சிறுக அரித்து கருப்பு புள்ளியாகத் தொடங்கி, நாளடைவில் பெரிய குழியாக மாறி பல் சொத்தையை ஏற்படுத்துகிறது. குளிர்ந்த உணவுகளை சாப்பிடும்போது பல்லில் கூச்சம் ஏற்படுவது, பற்களின் உணர்திறன் அதிகரிப்பது, இனிப்பு சாப்பிடும்போது தாங்க முடியாத வலி உண்டாவது ஆகியவை பல் சொத்தையின் முக்கிய அறிகுறிகளாகும். […]
Teeth 2026

You May Like