துப்பறிவாளன், இரும்புத்திரை, நட்பே துணை போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்தவர் ரஞ்சனா நாச்சியார்.. பாஜகவில் இருந்த இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தவெகவில் இணைந்தார்.. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய்யை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்..
தனது விவாகரத்து குறித்து பேசிய விஜய் அதெல்லாம் ஒர்த் இல்லை என்று பேசியிருந்தார்.. 27 ஆண்டுகள் குடும்பம் நடத்திய மனைவி ஒர்த்தே இல்லை என்றூ விஜய் கூறியதை அவரின் சொந்த்ட கட்சியினரே ஏற்கவில்லை..
இதை கண்டித்து தான் ரஞ்சனா நாச்சியார் அறிக்கை வெளியிட்டார். அதில் “ ஊர் குழந்தைக்கு தாய்மாமனாக சீர் கொடுக்கும் முன், சொந்த குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பதே முக்கியம் என விஜய்க்கு அறிவுரை வழங்கினார்.. மேலும் இதை தொடர்ந்து திமுகவில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் சமீபத்தில் திமுகவில் இணைந்தார்..
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ரஞ்சனா நாச்சியார் மனு அளித்துள்ளார்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிடும் தவெகவினரை அக்கட்சி தலைவர் விஜய் கண்டிப்பதில்லை.. தவெகவில் இருந்து வெளியேறும் பெண்களை ஆபாசமாக பதிவிட்டு துன்புறுத்துவது இவர்களின் நோக்கம்.. விஜய்யின் படத்தையும், கட்சியின் சின்னத்தையும் படமாக வைத்துக் கொண்டே ஆன்லைனில் அவதூறாகவும், ஆபாசமாகவும் பதிவிடுகின்றனர்..
இதை எல்லாம் கண்டிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் விஜய்க்கு உள்ளது. இதை விஜய் கண்டிக்க வேண்டும்.. இதை கண்டித்து வீடியோவோ அல்லது அறிக்கையோ வெளியிட வேண்டும்.. விஜய் இளம் தலைமுறையினரை மோசமான நிலைக்கு தள்ளி வருகிறார்.. இது சமுதாயத்திற்கு கேடான ஒரு விஷயம்.. தவெக என்பது பெரிய அபாயகரமான கட்சியாக நான் பார்க்கிறேன்..
விஜய் நேற்றிரவு டிஜிபி ஆபிஸில் பொன்ராஜ் சொன்ன கருத்துக்காக புகார் கொடுத்திருக்கிறார்.. பொன்ராஜ் சொன்னது சரி என்று நான் சொல்லவில்லை.. அவரின் கருத்து கண்டனத்திற்குரியது.. பொன்ராஜுக்கும் திமுகவுக்கும் என்ன சம்மந்தம்..? திமுக தான் எல்லாத்துக்கும் காரணம்.. விஜய் மீது மனைவி புகார் கொடுத்தாலும் சரி, கட்சியை விட்டு யார் வெளியேறினாலும் சரி என எதற்கெடுத்தாலும் திமுக தான் காரணம் என்று குற்றம்சுமத்துவது நல்லது கிடையாது.. சட்டத்தை மதித்து இதை புகாராக கொடுத்துள்ளோம்..” என்று தெரிவித்தார்..
Read More : “விஜய் சரியான நேரத்திற்கு வர வேண்டும்..” தவெக நிர்வாகிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் அட்வைஸ்..!



