fbpx

குட் நியூஸ்..!! கிளாம்பாக்கத்தில் இன்று முதல் கூடுதல் பேருந்துகள்..!! போக்குவரத்துத் துறை அறிவிப்பு..!!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று முதல் 120 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி 740 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 120 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக ஆன்லைனில் முன்பதிவு வசதியுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 1,221 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து வெளியூர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 361 பேருந்துகளும், மற்ற போக்குவரத்து கழகங்கள் சார்பில் 734 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை முதல், கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 1,215 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளன.

கிளாம்பாக்கத்தில் இருந்து வார விடுமுறையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இயக்கப்படும் பேருந்துகளில் 14,440 முன்பதிவு இருக்கைகளும், சனிக்கிழமை 85,265 இருக்கைகளும், ஞாயிற்றுக்கிழமை 86,411 இருக்கைகள் காலியாக இருப்பதாகவும், எனவே, பயணிகள் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்கவும் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் 14,440 முன்பதிவு இருக்கைகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மாணவர்களே பொதுத்தேர்வுக்கு ரெடியா..? ஹால்டிக்கெட் வந்துருச்சு..!! எப்படி டவுன்லோடு செய்வது..?

Fri Feb 16 , 2024
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி, அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை, வரும் 20ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் 20ஆம் தேதி பிற்பகல் முதல் www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, “online […]

You May Like