தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சிம்பு. தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். சிம்பு என்றாலே சர்ச்சை, காதல், கிசு கிசு என அவரை பற்றி வராதே செய்திகளே இல்லை. ஆனாலும் அவரது மார்க்கெட் குறைந்ததே இல்லை. இப்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். நீண்ட வருடங்களாக எதிர்பார்த்த கூட்டணி இப்போது அமைந்திருப்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவரிடம் சிம்பு அறை வாங்கிய சம்பவம் ஒன்று தெரிய வந்திருக்கிறது. 2006ல் நடந்த இந்த சம்பவம் குறித்து சிம்பு அளித்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த பேட்டியில் சிம்பு கூறியதாவது, “கலைஞரை நான் தாத்தா என்று தான் சின்ன வயதில் இருந்து அழைப்பேன். வல்லவன் படத்தை இயக்கிய நேரத்தில் கருணாநிதி தாத்தா எனக்கு படத்தை போட்டு காண்பிக்க வேண்டும் என சொல்லியிருந்தார். ஆனால் நான் அவர் சொன்னதையே மறந்துவிட்டேன். படமும் ரிலீஸ் ஆகிட்டு.

அதனையடுத்து நாட்டிய அரங்கேற்ற விழா ஒன்று நடந்தது. அந்த விழாவில் கலந்துகொள்ள நான் சென்றிருந்தேன். கலைஞர் கருணாநிதி தாத்தாவும் வந்திருந்தார். அவர் சொன்னது எனக்கு நியாபகத்திலேயே இல்லை. அவரை பிடித்து நான் அழைத்து சென்றபோது, என் கன்னத்திலேயே பளார் என்று ஒன்று அறைந்து உன்னை படத்தை திரையிட சொன்னேனே ஏன் செய்யவில்லை என கேட்டார்.
உடனே நானோ சீக்கிரமே உங்களுக்கு திரையிட்டு காண்பிக்கிறேன் என சொல்லி சமாளித்துவிட்டேன்” என்றார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் திமுக-வுடன் நெருக்கமானவர். இதனாலேயே சிம்புவுக்கு கலைஞர் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அவரை “தாத்தா” என்றுதான் அழைப்பார். கலைஞர் குறித்து சிம்பு அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read more: UPI-யில் ரூ.5 ஆயிரம் வரை உடனடி கடன்.. பெண்களுக்கு சூப்பர் சான்ஸ்..! – முழு விவரம் இதோ..



