தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திருவாரூரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.. டி.ஆர்பி. ராஜா, பூண்டி கலைவாணன், மாரிமுத்து, முகமது முபாரக் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.. அப்போது பேசிய அவர் “ திருவாரூர் என்றால் அது திமுக ஊர், அதனால் தான் நான் பிரச்சாரத்தை இங்கே இருந்து தொடங்குகிறேன்.. 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சூப்பர்ஸ்டாராக விளங்குகிறது.. மன்னையில் பிறந்து சென்னை கோட்டைக்கு சென்று தொழில் வளர்ச்சிக்கு பங்காற்றியவர் டி.ஆர்.பி ராஜா. நான் உங்கள் வீட்டு பிள்ளை, இந்த மண்ணின் மைந்தன்..
1948-ம் ஆண்டுக்கு பிறகு 22 ஆண்டுகள் ஓடாமல் இருந்த ஆழித்தேரை ஓட வைத்தவர் கலைஞர்.. திமுக ஆட்சியில் இருந்த போதெல்லாம் திருவாரூருக்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.. திருவாரூர் நகராட்சியில் கலைஞர் பேருந்துநிலையம், காய்கனி அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.. திருவாரூரில் ஒன்றியங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது..
திருவாரூரில் மத்திய பல்கலை., மன்னார்குடியில் அரசு கலைக்கல்லூரி என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.. நாள் முழுக்க சாதனைகளை மட்டும் பட்டியலிட்டு சொல்லிக் கொண்டே செல்லக் கொண்டே செல்லலாம்.. 2021-ல் திமுக மீது நம்பிக்கை வைத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தீர்கள்..
அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமை ஓரளவு சரி செய்த உடன் 1.31 கோடி மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கொடுத்தோம். மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணம், காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தோமா இல்லையா..? புதுமைப் பெண் திட்டத்தை உருவாக்கி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கினோம்.. திராவிட மாடல் அரசின் முத்திரை திட்டங்களை ஒவ்வொரு மேடையிலும் புள்ளி விவரங்களுடன் கூறி வருகிறேன்.. தமிழ்நாட்டை பின்பற்றி மற்ற மாநிலங்களும் உரிமைத் தொகை வழங்கி வருகின்றன.. நான் முதல்வன் திட்டம் ஹிட்டாகி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
ஏழைகளின் சுருக்குப் பையில் இருந்து காசை பிடுங்கும் திட்டங்களை கொண்டு வருகிறது பாஜக அரசு.. எல்லா வகையிலும் தமிழ்நாடு டாப்பில் இருப்பது பாஜகவுக்கும் அதன் அடிமை கட்சிகளுக்கும் எரிச்சலை உண்டாக்கி உள்ளது..
அவதூறு பரப்பியதால் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.. கலவர வெறியோடு திரிந்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி உள்ளது.. தேர்தல் அறிக்கையில் அளித்துள்ளது வாக்குறுதிகள் மட்டுமல்ல திராவிட மாடல் 2.0 அரசில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் உள்ளன.
மகளிருக்கு வழங்கும் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் மூலம் உங்களுக்கு வீட்டுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ளலாம்.. மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ.2,000 ஆக உயரப்போகிறது.. அடுத்த 5 ஆண்டுகளில் 35 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க உள்ளோம்.. விவசாயிகள் பயன்பெற மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்பு செட்டுகள் வழங்க உள்ளோம்..
நான் கலைஞரின் மகன், சொல்வதை நிச்சயம் செய்வேன்.. நான் சொன்னால் நிச்சயம் செய்வேன். சொல்லாததை அதிரடியாக செய்வேன்.. பாஜகவிடம் சரணாகதி அடைந்து அதிமுக ஒரு கூட்டணி அமைந்துள்ளது..
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை நாம் காப்பியடித்ததாக கூறி எடப்பாடி பழனிசாமி புலம்புகிறார்.. எடப்பாடி பழனிசாமிக்கு எந்த புரிதலும் கிடையாது, தொலைநோக்கு பார்வையும் கிடையாது.. பாஜகவுக்கு திமுகவை எதிர்க்க பலமில்லை என்பதால் அதிமுகவை விலைக்கு வாங்கி உள்ளது..
தேர்தலுக்காக கூட எதையும் செய்ய முன் வராத வஞ்சக எண்ணம் கொண்டது தான் பாஜக அரசு. அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் எடப்பாடி பாஜகவின் கிளைச் செயலாளராக உள்ளார். கலெக்ஷன், கரப்ஷன் என ஆட்சி நடத்திய எடப்பாடியை மிரட்டி பாஜக கூட்டணி அமைத்துள்ளது.. தோற்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது என்.டி.ஏ கூட்டணி.. தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்றால் திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழ்நாடு கலவர பூமியாக மாறாமல் இருக்க பாஜக – அதிமுக கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும்.. என்.டி.ஏவை தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..



