காஷ்மீரில் நீண்ட காலமாக நிலவி வரும் கிளர்ச்சி மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, பாகிஸ்தானைச் சேர்ந்த மதகுரு முஃப்தி சயீத் கான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
‘காஷ்மீரும் நமது பாசாங்குத்தனமும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற சொற்பொழிவில், கிளர்ச்சியாளர்களின் செயல்பாடுகளை அவர் வெளிப்படையாக விமர்சித்தார். “முஜாஹிதீன்கள்” என போற்றப்படும் ஆயுதக் குழுக்கள், அகதி முகாம்களில் தஞ்சமடைந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை உணவுக்காக பாலியல் சலுகைகள் வழங்கத் திணிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“ஒரு ரொட்டிக்காகவே பெண்கள் தங்கள் உடலை விற்க நிர்பந்திக்கப்பட்டனர்” என்ற அவரது கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், பாகிஸ்தானின் அரசியல் மற்றும் மத அமைப்புக்குள் இருந்தே வரும் அரிதான ஒப்புதல் இது என தெரிவித்தன. மேலும், ஐ.எஸ்.ஐ ஆதரவில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் உள்ளூர் மக்களைத் திட்டமிட்டு சுரண்டியதாகவும் குற்றம்சாட்டினர்.
முன்னதாகவே சர்வதேச மனித உரிமை அமைப்புகள் காஷ்மீரில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மீது வன்முறை நடந்ததாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன. இந்நிலையில், கானின் இந்த ஒப்புதல் அந்த குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலுவூட்டுகிறது என கூறப்படுகிறது. காஷ்மீர் மக்களின் உரிமைக்காக போராடுவதாகக் கூறப்படும் சில குழுக்கள், அதே மக்களைச் சுரண்டுகின்றன என்ற குற்றச்சாட்டை இந்த சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.



