ரூ.48,000 சம்பளத்தில் அரசு வங்கி வேலை.. டிகிரி இருந்தால் போதும்! எப்படி விண்ணப்பிப்பது..?

Bank Jobs Recruitment.jpg 1

பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 உள்ளூர் வங்கி அதிகாரி (JMGS I) பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள், இந்தியா முழுவதும் உள்ள வங்கி கிளைகளில் ஏதேனும் ஒன்றில் பணியமர்த்தப்படுவார்கள். தமிழ்நாட்டில் 65 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


காலிப்பணியிடங்கள்:

சத்தீஸ்கர் – 80,
குஜராத் – 125,
இமாச்சலப் பிரதேசம் – 20,
ஜார்க்கண்ட் – 10,
கர்நாடகா – 60,
கேரளா – 10,
மத்தியப் பிரதேசம் – 60,
மகாராஷ்டிரா – 60,
ஒடிசா – 80,
தெலுங்கானா – 30,
உத்தரப் பிரதேசம் – 200,
அருணாச்சலப் பிரதேசம் – 15,
அஸ்ஸாம் – 50,
நாகாலாந்து – 05,
மேற்கு வங்கம் – 30,
பஞ்சாப் – 100.

கல்வித்தகுதி:

* அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* Reserve Bank of India வெளியிட்டுள்ள இரண்டாவது அட்டவணையில் வணிக வங்கி அல்லது மண்டல கிராமப்புற வங்கி இவற்றில் ஏதேனும் ஒன்றில் அதிகாரி பதவியில் குறைந்தபட்சம் 18 மாதங்கள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் இருக்க வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC NCL) 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பிள் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரு.48,480 முதல் ரூ. 85,920 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் உள்ளூர் மொழித் திறன் சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் மொழித் திறன் கட்டாயம் ஆகும்.

எழுத்துத் தேர்வு பிரிவுகள்:

ஆங்கில மொழி: 30 கேள்விகள் – 30 மதிப்பெண்கள்
வங்கி அறிவு: 40 கேள்விகள் – 40 மதிப்பெண்கள்
பொது அறிவு / பொருளாதாரம்: 30 கேள்விகள் – 30 மதிப்பெண்கள்
கணினி திறன்: 20 கேள்விகள் – 20 மதிப்பெண்கள்

எப்படி விண்ணப்பிப்பது? தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://punjabandsind.bank.in/ இன் ‘Careers’ என்ற பக்கத்திற்குச் சென்று, விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 20 விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும்.

Read more: கேஸ் பெயரால் கூடுதல் பணம் கேட்கப்படுகிறதா? இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்..! மத்திய அரசு அறிவிப்பு..!

English Summary

Government bank job with a salary of Rs. 48,000.. A degree is enough! How to apply..?

Next Post

அடுத்த ஷாக்.. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய இந்தியன் ஆயில் நிறுவனம்.. ஒரு லிட்டர் எவ்வளவு..?

Thu Apr 2 , 2026
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றங்கள் மேற்கு ஆசியாவில் ஒரு போருக்கு வழிவகுத்துள்ளன. இது உலகம் முழுவதும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தைப் பாதித்து, விலையேற்றத்திற்கு இட்டுச்சென்றுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் ஏற்கனவே கடுமையாக உயர்ந்துள்ளன. இந்தச் சூழலில், பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பிரீமியம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. உயர்தர சொகுசு கார்கள் மற்றும் சூப்பர் பைக்குகளில் […]
Petrol Pump 1 1

You May Like