இதுக்காக தான் ஜனநாயகன் படத்திற்கு தடை.. அது கூட்டு சூழ்ச்சி.. முதன்முறையாக மௌனம் கலைத்த விஜய்..!

Vijay speech

திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று விஜய் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது திமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் ஒன்று தான் என்று விஜய் விமர்சித்தார்.. மேலும் இந்த தேர்தலில் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக்கொண்டார்..


தொடர்ந்து பேசிய அவர் “ எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் நான் கேட்பேன்.. எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க.. கரூர் சூழ்ச்சி தொடங்கி நம்ம கடைசி படம் ஜனநாயகன் வரை பல சூழச்சிகள் நமக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யப்பட்டன.. உங்களுக்கும் எனக்கும் உள்ள பூர்வஜென்ம பந்தம் இன்னும் நெருக்கமாகி விடுமோம், அது தேர்தலில் மிகப்பெரிய ஆயுதமாக மாறிவிடும் என ஜனநாயகனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. இது ஒரு கூட்டு சூழ்ச்சி.. உங்களைப் போன்று எனக்கும் நியாயம் கேட்டு தான் உங்களை நோக்கி வந்துள்ளேன்..

உங்களுக்காக நன்றிக் கடனை செலுத்த மட்டுமே வந்திருக்கிறேன்.. அத்தனையும் தூக்கி எறிந்துவிட்டு, அத்தனை வலிகளை தாங்கிக் கொண்டு உங்களுக்காகவே வந்திருக்கிறேன்.. ஒரு நாளும் பொய் சொல்லி உங்களை ஏமாற்ற மாட்டேன்.. 4 முனை போட்டி 40 முனைப் போட்டி என எத்தனை வந்தாலும் இங்கு இருமுனைப் போட்டி தான்.. ஒன்று தவெக.. மற்றொன்று திமுக.. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா? மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா..?

உங்க விஜய்க்கு, உங்க அண்ணனுக்கு, உங்க தம்பிக்கு, உங்கள் பிள்ளைக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்.. தயவு செய்து விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுங்க.. இது ஒரு விசில் புரட்சி தேர்தல்.. தவெக வேட்பாளர்களும் நானும் வேறு வேறல்ல.. தவெக வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெற செய்ய வேண்டும்..” என்று தெரிவித்தார்.. தொடர்ந்து தவெக பரப்புரை பாடலை பாடி ஓட்டு கேட்டார் விஜய்..

Read More : திமுக, பாஜகவை நம்பாதீங்க.. 100 சதவீதம் இந்த விஜய்யை நீங்கள் நம்பலாம்.. திருச்சியில் விஜய் பிரச்சாரம்..!

RUPA

Next Post

ஸ்பாவில் மஜாவா நடந்த பாலியல் தொழில்.. உள்ளே புகுந்த போலீஸ்.. அந்த கோலத்தில் பெண்கள்! ECR-ல் அரங்கேறும் அதிர்ச்சி..!

Thu Apr 2 , 2026
Illegal sex work was carried out at a massage center operating in the Neelankarai area.
sexwork 1

You May Like