திருச்சி மாவட்டத்தில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.. கேஸ் பிரச்சனையால் எவ்வளவு பிரச்சனைகள்? எவ்வளவு டீக்கடைகள் மூடப்பட்டுவிட்டது..? எத்தனை ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது. கேஸ் தட்டுப்பாட்டுக்கு மத்திய மாநில அரசுகள் தான் காரணம்.. ஆனால் ஸ்டாலின் சாரை கேட்டால் அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுவார்.. தனது சொந்த பிரச்சனைக்காக டெல்லி செல்லும் ஸ்டாலின் கேஸ் பிரச்சனைக்காக டெல்லி சென்றிருக்கலாமே..?
கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருவேன் என்று சொன்னீர்களே என்னாச்சு? ரேஷன் கடைகளில் சர்க்கரை கூடுதலாக தருவேன் என்று சொன்னீர்களே? என்ன ஆச்சு..? நீட் ரத்து என்னாச்சு? என்று முதல்வரை நோக்கி விஜய் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய விஜய் “ பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றுவது தான் ஸ்டாலின் சாரின் வேலை.. ஆனால் தவெக ஆட்சிக்கு வந்தால் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். மகளிருக்கு மாதம் ரூ.2500 கொடுக்கப்படும், அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக செல்லலாம்.. கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளில் தான் எங்கள் கவனம் இருக்கும்.
திமுஅக் அரசின் ஊழலை கணக்கு போட்டால் தலை சுற்றும்.. இப்போதும் அடுத்த கட்ட பொய் வாக்குறுதிகளுடன் ஸ்டாலின் சார் ரெடியாகிவிட்டார்.. ஸ்டாலின் சாரின் அரசு பயனற்ற அரசு.. இந்த முறை திமுக கல்லாப்பெட்டி கூட்டணி உடன் சேர்ந்து, மற்றும் பலர் கூட்டணியும் கள்ள கூட்டணி போட்டுக் கொண்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து விஜய்யை எதிர்த்து வருகின்றனர்.. 100 சதவீத நியாயமான ஆட்சியை கொடுப்போம், 100 சதவீதம் இந்த விஜய்யை நீங்கள் நம்பலாம்..
பாதி கதர் கூட்டணி, பாதி காவி கூட்டணியோடு சேர்ந்து ஏமாற்றுகின்றனர்.. திமுகவையும் நம்பாதீங்க, பாஜகவையும் நம்பாதீங்க.. இரண்டுமே ஒன்று தான்.. இந்த தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு தந்தால் இன்னும் பல ஆண்டுகளுக்கு தமிழ்நாடு சூப்பாராக இருக்கும்..” என்று தெரிவித்தார்..



