fbpx

அக்னிவீர் திட்டத்தின் கீழ், இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு…! இந்த தவறை மட்டும் செய்யாதிங்க…!

அக்னிவீர் திட்டத்தின் கீழ், இந்திய ராணுவத்திற்கு அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன், பொதுப் பணி, செவிலியர் உதவியாளர், மருந்தாளுநர், பெண்ராணுவ போலீஸார், ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தகுதிவாய்ந்த ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வம் உள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க ஏப்ரல் 27-ம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு சென்னையில் உள்ள ராணுவ தேர்வு அலுவலகத்தை 044-25674924 என்ற தொலைபேசி எ்ண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விளக்கங்கள்பெற ஆள்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) , புனித ஜார்ஜ் கோட்டை வளாகம், சென்னை 600 009 என்ற முகவரியிலோ, 044 – 2567 4924 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். தேர்வு நடைமுறைகள் நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் முற்றிலும் தானியங்கி முறையில் மேற்கொள்ளப்படும். எனவே, ஆள்சேர்ப்புக்கு உதவுவதாகவோ அல்லது வேலை வாங்கித் தருவதாகவோ கூறி, மோசடியில் ஈடுபடுவோரை நம்பி விண்ணப்பதாரர்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

Vignesh

Next Post

முக்கிய தகவல்...! மூன்று ஆண்டில் தமிழகத்தில் 60,567 நபர்களுக்கு அரசு பணி நியமனம்...!

Mon Feb 19 , 2024
கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் 60,567 நபர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னையில் 16.02.2024 அன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டில் இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மாதம் வரை 60,567 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விபரத்தை முதலமைச்சர் குறிப்பிட்டார்கள். இதுகுறித்து சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு பின்வரும் விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில், அரசுப் பணிக்கான பணியாளர்களை தேர்வு செய்வதற்காக […]

You May Like