சொந்த குடும்பத்தினருக்கு கடன் கொடுத்தவரை இதுவரை பார்த்ததே இல்லை என்றும், நடிகர் சிவாஜி கணேசனுக்கு கிடைந்த முடிவுதான் விஜய்க்கும் கிடைக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய் தனது சொத்துமதிப்புகளை குறிப்பிட்டிருந்தார். அதன்படி விஜய் பெயரில் உள்ள அசையும் சொத்து சொத்து ரூ.92 கோடி; மனைவி சங்கீதா பெயரில் ரூ.15.51 கோடி உள்ளது.. வெளிநாட்டு சொத்துகள் உட்பட விஜய்க்கு அசையா சொத்து மதிப்பு ரூ.404 கோடி உள்ளது. கையில் ரொக்கமாக ரூ.2 லட்சம் மட்டுமே உள்ளது. அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.22.15 கோடி என்று தெரிவித்துள்ளார்.
தனது வசம் ரூ.1.20 கோடி மதிப்பில் 883 கிராம் தங்கம் இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார். மனைவி வசம் ரூ.4.07 கோடியில் 3,132 கிராம் தங்கம், ரூ.1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைரம் இருக்கிறது.. BMW 530, Toyota Lexus, Toyota ellfire, BMW I7, Maruthi Swift உட்பட சுமார் 6 கோடியில் 5 ஆடம்பர கார்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
மேலும் தாய் ஷோபாவுக்கு ரூ.87 லட்சம், தந்தை எஸ்.ஏ.சிக்கு ரூ.3.02 கோடி கடனாக கொடுத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். மகன் சஞ்சய்க்கு ரூ.8.78 லட்சம், மகள் திவ்யா சாஷாவுக்கு ரூ.4.60 லட்சம் கடன் / முன் பணம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலர் முத்தரசன், திரைப்படத்தில் கிடைத்த ஆதரவு மூலம் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை விஜய் உணர வேண்டும். இதற்கு முன் நடிகர் சிவாஜி கனேசன் தனியா கட்சி தொடங்கி போட்டியிட்டார். முடிவு என்ன என்பது எல்லாருக்கும் தெரியும்.
தன் குடும்பத்தில் உள்ள அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என அனைவருக்கும் கடன் கொடுத்திருக்கிறேன் என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். சொந்த குடும்பத்தினருக்கு கடன் கொடுத்தவரை இதுவரை பார்த்ததே இல்லை. ஜனநாயகன் படம் வராததற்கு யார் காரணம் என்பது எல்லாருக்கும் தெரியும். அதற்கும் மாநில அரசுக்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் மாநில அரசை விஜய் விமர்சிப்பது எப்படி நியாயம்.. அவர் யாருக்கு நாமினியா செயல்படுகிறார்” என கூறினார்.



