தவெக தலைவர் விஜய் சென்னை நீலாங்கரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக ஆகிய நான்கு முக்கிய அரசியல் கட்சிகள் நேருக்கு நேர் மோதுவைத்தால் பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே கிளம்பியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 4023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் 3579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, கட்டுப்பாட்டு அறைகள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும், இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நடிகர் அஜித் குமார் திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்தார். தேர்தலில் வாக்களிக்க தவெக தலைவர் விஜய் சென்னை நீலாங்கரை மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு வருகை தந்தார். கடந்த முறை சைக்கிளில் வந்து கவனம் ஈர்த்த விஜய், இன்று காரில் வந்தார்.
அவரை காண காலை முதலே தொண்டர்கள் கூடியிருந்தர். விஜய் வாக்குச்சாவடிக்கு வந்ததும் தொண்டர்கள் காரை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் மற்றும் பவுன்சர்கள் விஜயை பாதுகாப்பாக வாக்குச்சாவடிக்குள் அழைத்து சென்றனர். அதன் பின் தனது ஜனநாயக கடமையாற்றினார்.
தொடர்ந்து சீமான், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தங்களுக்கான வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கை பதிவு செய்தனர். அதேபோல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி மேல் நிலைப்பள்ளியில் பிரேமலதா விஜயகாந்த் தனது வாக்கை செலுத்தினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது வாக்கை செலுத்தினார்.
Read more: வெள்ளை கோட் சூட்.. முதல் ஆளாக வாக்களித்தார் நடிகர் அஜித்..!



