கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.11,000 உதவித்தொகை.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

pregnant 1

நாட்டு மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும், திருமணமான பெண்களுக்கான ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் பெயர் மாத்ரு வந்தனா யோஜனா . இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.11,000 வழங்குகிறது.


பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், கர்ப்ப காலத்தில் அதிக சிரமங்களை எதிர்கொள்வது வழக்கம். குறிப்பாக கூலி வேலைக்கு செல்லும் பெண்கள், கர்ப்பமாக இருக்கும் போது வேலை செய்ய முடியாமல் வருமான இழப்பை சந்திக்கின்றனர். இந்த நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு செயல்படுத்தும் “மாத்ரு வந்தனா யோஜனா” திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி பயனாளியின் வங்கி கணக்கில் நேரடியாக (DBT) வரவு வைக்கப்படுகிறது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இத்திட்டத்தின் கீழ் இணைந்து நிதியுதவி பெறுவதற்கு பயனாளியின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 8 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். அதேபோல, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான பிபிஎல் ரேஷன் கார்டு இருக்க வேண்டும். அல்லது ஆயுஷ்மான் பாரத் யோஜனா கார்டு இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்: பயனாளியின் ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், முகவரிச் சான்று, வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், மொபைல் நம்பர், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவை தேவைப்படும்.

Read more: BREAKING| அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

English Summary

Rs. 11,000 subsidy for pregnant women.. Do you know about this scheme of the central government..?

Next Post

கமல்ஹாசனின் சாதனையை முறியடித்த 5 வயது சிறுமி.. வியந்து பாராட்டிய உலகநாயகன்..!

Fri Apr 3 , 2026
இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த நடிகரான கமல்ஹாசனின் சாதனையை, 5 வயது சிறுமி ஒருவர் முறியடித்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா? , கமல்ஹாசனே அந்தச் சிறுமியைப் பாராட்டியும் உள்ளார். யார் அந்தச் சிறுமி? விரிவாக பார்க்கலாம்.. கடந்த ஆண்டு, 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில், பாலிவுட்டின் ‘பாட்ஷா’ ஷாருக்கான், ‘ஜவான்’ திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார். நடிகை ராணி முகர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான விருது […]
Treesha dosar kamalhaasan

You May Like