தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல்களம் அனல் பறந்து வருகிறது.. பிரதான அரசியல் கடட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. சென்னை, கோவையில் தலா 3 தொகுதிகளை பாஜக கோரிய நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னையில் மயிலாப்பூர், கோவை வடக்கு மட்டும் வழங்கி உள்ளார்.. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்ற 4 தொகுதிகளில் 2 தொகுதிகள் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன..
இந்த சூழலில் பாஜக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது.. அதன்படி மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன, அவினாசியில் எல். முருகன், கோவை வடக்கில் வானதி சீனிவாசன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்..
கோவையில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், அண்ணாமலை இந்த முறை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என தேசிய தலைமை அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.. ஆனால் விரும்பிய தொகுதி கிடைக்காததால் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அண்ணாமலை முடிவு செய்துவிட்டதாக கூறப்பட்டது. அதற்கேற்றார் போலவே இன்று வெளியான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை..
இதுகுறித்து பேசிய அண்ணாமலை “ சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று ஏற்கெனவே எழுத்துபூர்வமாக தெரிவித்திருந்தேன். பாஜக மையக்குழு கூட்டத்தில்கூட போட்டியில்லை என்பதை தெரிவித்திருந்தேன்.
நான் எந்த தொகுதியையும் கேட்கவில்லை. காலம் இன்னும் இருக்கிறது; காட்சிகள் மாறும்; நிறைய தேர்தல்கள் வரத்தான் போகிறது. சட்டமன்ற தேர்தலில் பரப்புரை செய்வதுதான் எனது பணி.” என்று கூறியிருந்தார்..
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கான பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.. அதன்படி, அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்க 6 மாநில முதலமைச்சர்கள் தமிழ்நாடு வருகை தர உள்ளனர்.. உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம், டெல்லி முதலமைச்சர்கள் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகை தர உள்ளனர்..
10 மத்திய மற்றும் இணை அமைச்சர்கள் உட்பட 21 பேர் கொண்ட நட்சத்திர பரப்புரையாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை, சரத்குமார், நமீதா, ஒய்.ஜி. மதுவந்தி ஆகியோரின் பெயர்கள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது..
Read More : தேர்தலில் பரப்புரையா..? நடிகர் ரஜினி சொன்ன ‘நச்’ பதில்..! காலம் பதில் சொல்லுமா..?



