குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி.. சுந்தர் சியின் சொத்து மதிப்பு எவ்வளவு..? வேட்பு மனு விவரம் வெளியானது..!

sundar c nomination

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக,, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.. அதில் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன..


அந்த வகையில் மதுரை மத்தி தொகுதியில் புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக இயக்குனர் சுந்தர் சி அறிவிக்கப்பட்டார்.. அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.. அப்போது அவரின் மனைவி குஷ்புவும் உடனிருந்தார்..

இந்த நிலையில் சுந்தர் சி.யின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சுந்தர் சி பெயரில் ரூ.2.97 கோடி அசையும் சொத்து, ரூ.17.7 கோடி அசையா சொத்துக்கள் உள்ளதாகவும், அவரது மனைவி குஷ்பு பெயரில் ரூ.6 கோடி அசையும் சொத்துகள், ரூ.4.17 அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சுந்தர் சி வசம் 220 கிராம் தங்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவி குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம் 24.3 கிலோ வெள்ளி இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.. மேலும் சுந்தர் சியிடம் 3 கார்களும், குஷ்புவிடம் 1 கார் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : திடீர் ட்விஸ்ட்..! தேர்தலில் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்யும் திருமாவளவன்..? விரைவில் அறிவிப்பு..!

RUPA

Next Post

அமைதியாக உயிரைப் பறிக்கும் நோய்கள் இவை தான்..! முன்கூட்டியே பரிசோதனை செய்தால் நல்லது..!

Sat Apr 4 , 2026
‘சைலண்ட் கில்லர்’ நோய்களின் உண்மையான இயல்பு என்னவென்றால், நோய் உள்ளுக்குள் மோசமடைந்து கொண்டிருந்தாலும், மேற்பரப்பில் எந்த அறிகுறிகளும் வெளிப்படுவதில்லை. வலியும் இல்லை, அன்றாட நடவடிக்கைகளில் எந்த இடையூறும் இல்லை என்பதால், எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற மாயையில் நாம் இருக்கிறோம். ஆனால், அந்த அமைதியே ஆபத்தானதாக மாறிவிடுகிறது. முன்னணி மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. முறையான தூக்கமின்மை, உணவின்மை, துரித உணவுகளை உண்ணுதல் போன்ற வாழ்க்கை முறை நோய்களே ரத்த அழுத்தம், […]
heart attack

You May Like