துணை முதல்வர் பதவிக்காக தேர்தலில் போட்டியா..? தொங்கு சட்டசபை வருமா..? அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த திருமா..!

Thirumavalavan

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. கடந்த தேர்தல்களை போலவே இந்த தேர்தலிலும் திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது.. திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, சட்டமன்ற தேர்தலில் 8 இடங்களில் போட்டியிடுகிறது..


விசிக சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.. அப்போது சிதம்பரம் தொகுதி எம்பியாக உள்ள திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.. ஆனால் எம்.பியாக இருக்கும் திருமாவளவன் ஏன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்..

இந்த சூழலில் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று திருமாவளவன் நேற்று அறிவித்தார். அப்போது தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் திருமா விளக்கம் கொடுத்தார்..

அப்போது பேசிய அவர் “ இந்த சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறேன் என்று அறிவித்திருந்தேன்.. திருமாவளவன் துணை முதல்வராக ஆசைப்படுகிறார் என்றும், அதனால் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும், தொங்கு சட்டசபை வரும் என்று திருமா நம்புவதாகவும் பல வியூகங்களை கட்டமைத்து வருகின்றனர்..

சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரை வெளியேற்றியதற்கு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற காரணம் தான்.. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.. விடுதலை சிறுத்தைகளை பிடிக்காதவர்கள் பல அவதூறுகளை பரப்புகின்றனர்.. திமுகவுக்கு ஆதரவாக இருந்ததால் தான் 3 பேருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று ஒரு கட்டமைப்பை உருவாக்குகின்றனர்.

Subscribe to my YouTube Channel

2026-க்கு பின் தமிழ்நாடு அரசியல் சூழல் மாறும், அதனால் தான் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்து போட்டியிட விரும்பினே.. பாஜகவும் அதிமுகவும் சில ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர்.. எனக்கு யாரும் கட்டளையிட முடியாது.. எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்த்து போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்தேன்..

திருமாவளவன் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார் என்ற ரீதியாக கருத்துகள் பரப்பப்படுகிறது.. இதை நான் புறந்தள்ள முடியாது.. பின்வாங்குவதும் ஒரு ராஜ தந்திரம் தான்.. திட்டமிட்ட விசிகவுக்கு எதிராக பரப்பப்படும் அவதூறுகளும், என் நோக்கத்தை கொச்சைப்படுத்துவது போல் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.. பதவிக்காக நான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.. திருமாவளவனை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் பரப்பப்படும் அவதூறுகளை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.. தொங்கு சட்டசபை வரும் என்று சந்தேகப்பட்டு நான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறேன் என்பது தவறான கருத்து.. எனது நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்.. இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை..” என்று தெரிவித்தார்..

Read More : தமிழ்நாட்டில் மும்மொழி கொண்டு வருவோம் என்று பிரச்சாரம் செய்ய முடியுமா? மோடி, அமித்ஷாவுக்கு ஸ்டாலின் ஓபன் சேலஞ்ச்..!

RUPA

Next Post

கோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா..? எதை தவிர்க்கனும்..? மருத்துவர்கள் விளக்கம்!

Sun Apr 5 , 2026
Can we eat non-vegetarian food during summer..? What to avoid..? Doctors explain!
non veg food

You May Like