தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் நடந்து வருகிறது, இது இந்த வருடம் மே 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதே போல் புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ம் தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20- ம் தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ம் தேதியும், கேரள சட்டசபை மே 23-ம் தேதியும் முடிவடைகிறது. இதன் காரணமாக அசாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களிலும் இந்த வருடம் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆனையம் சமீபத்தில் 5 மாநில தேர்தல் தேதிகளை அறிவித்தது..
அந்த வகையில் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறுகிறது.. புதுச்சேரியில் நாளை மாலை உடன் பிரச்சாரம் முடிவடைய உள்ளது.. இதனால் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.. புதுச்சேரியில் என்.டி.ஏ கூட்டணி, காங்கிரஸ் – திமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது..
இந்த நிலையில் புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார்.. சீமான் பேசிக் கொண்டிருந்த போது டிவிகே, டிவிகே என்று தவெகவினர் முழக்கமிட்டனர்.. அப்போது ஆத்திரமடைந்த சீமான், டிவிகேவா..? இங்கே வந்து டீ வித்துட்டு போ.. என்று மைக்கில் கூறினார். இதையடுத்து அங்கிருந்த நாதகவினர் தவெகவினருடன் மோதலில் ஈடுபட்டனர்..
அப்போது தன் கட்சியினரை அழைத்த சீமான் “ என் அன்பு தம்பிகளே இங்கே வாருங்கள்.. நீங்கள் அறிவார்ந்த பிள்ளைகள்.. அவர்கள் வெறும் தற்குறியினர்.. நீங்கள் போராளியின் பிள்ளைகள்.. அவர்கள் கோமாளியின் பிள்ளைகள்.. நீங்கள் லட்சியவாதிகள் அவர்கள் ரசிகர்கள்..” என்று கூறினார்..
தொடர்ந்து தவெகவினர் டிவிகே டிவிகே என முழக்கமிட்டதால் சீமான் ‘ அங்கேயே இருந்து டீ விற்றுக் கொண்டிரு..” என்று கூறினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது..
Read More : மீண்டும் ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் எல்லாத்தையும் மாற்றிய விஜய்..! வேட்பு மனுவில் 3-வது முறையாக திருத்தம்..!



