Monkey fever vaccine:நடப்பாண்டு இறுதியில் குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது என கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
சட்டமேலவை பூஜ்ய வேளையில், பா.ஜ., உறுப்பினர் அருண் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குண்டுராவ், குரங்கு காய்ச்சலுக்கு, தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக, ஐ.சி.எம்.ஆர்., அனுமதி அளிக்க வேண்டும். ஏற்கனவே பல்வேறு கட்டங்களில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. நடப்பாண்டு இறுதியில் தடுப்பூசி கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஷிவமொகா, சிக்கமகளூரு, கார்வார் மாவட்டத்தின் சிர்சி, சித்தாபுரா பகுதிகளில் குரங்கு காய்ச்சல் தென்படுகிறது. ஆரம்பத்திலேயே இதற்கு சிகிச்சை பெற்றால், எந்த பிரச்னையும் இருக்காது. தாமதமானால் உயிருக்கு அபாயம் ஏற்படும்.
பல விதமான ஆராய்ச்சி நடத்தி, தடுப்பூசி அனுமதிக்க வேண்டும் என, ஐ.சி.எம்.ஆர்., இடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். நமக்கு திடீரென அனுமதி கிடைக்காது. பல கட்டங்களில் ஆராய்ச்சி செய்த பின், அனுமதி அளிப்பர். குரங்கு காய்ச்சலுக்கு நாங்கள் விரைந்து சிகிச்சை அளிக்கிறோம். தற்போதைக்கு அதிகமான உயிரிழப்பு ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். குரங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, நிவாரணம் வழங்குவது குறித்து, முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
English summary: Monkey flu vaccine by the end of this year
Readmore:https://1newsnation.com/edappadi-palaniswami-accused-of-ex-administrator-sensationalism/