“நெல்லையில் விஜய் பரப்புரைக்கு 51 நிபந்தனைகள்…” செங்கோட்டையன் பேட்டி..

vijay sengottaiyan

தமிழ்நாடு சட்டமன்ற் அதேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. இந்த இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் பெரம்பூர், திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.. மேலும் புதுச்சேரியில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்..


தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலும் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் விஜய் மட்டும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டவில்லை..

இந்த நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விஜய் நாளை பிரச்சாரம் செய்கிறார்.. நாளை காலை 10 மணியளவில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.. இதற்காக நெல்லை பாளையங்கோட்டையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது..

இந்த நிலையில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான் செங்கோட்டையன் நெல்லை சென்றுள்ளார்.. நெல்லையில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று அவர் பார்வையிட்டார்..

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் “ நெல்லையில் விஜய் பரப்புரை செய்ய 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.. விஜய் பிரச்சாரத்திற்கு மட்டும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படுகிறது. சென்னையை தவிர மற்ற இடங்களில் பிரச்சாரம் செய்ய பெரிய அளவில் பிரச்சனை இல்லை..

234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.. விஜய் நாட்டை ஆள வேண்டும் என்பது மக்களின் ஆசை.. அவர்களின் ஆசை கண்டிப்பாக நிறைவேறும்..” என்று தெரிவித்தார்..

Read More : Breaking : பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய்யின் வேட்பு மனு ஏற்பு..! களைகட்டும் தேர்தல் களம்..!

RUPA

Next Post

சமையலறையில் பெரும்பாலான கிருமிகள் இந்த இடத்தில்தான் இருக்கும். இதை மாற்றாமல் இருந்தால் ஆபத்து..

Tue Apr 7 , 2026
சமையலறை என்பது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மிக முக்கியமான பகுதியாகும். சமையலறை சுத்தமாக இருக்கும்போது, ​​அந்த வீட்டில் வசிப்பவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். அதனால்தான், சமையலறையை எப்போதும் மிகச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இருப்பினும், பாத்திரங்களைக் கழுவுவதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்ச்கள் (sponges) விஷயத்தில் பலர் மிகவும் கவனக்குறைவாக நடந்துகொள்கிறார்கள். ஆனால், சமையலறையிலேயே மிகவும் ஆபத்தான மற்றும் கிருமிகள் நிறைந்த ஒரு பொருள் எதுவென்றால், அது இந்தக் ஸ்பாஞ் […]
vessel washing sponge

You May Like