தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது..
இந்த சூழலில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.. இதுவரை சுமார் 7500 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.. கடைசி நாளான இன்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், அமைச்சர் துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மனு தாக்கல் செய்தனர்..
வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே தவெக தலைவர் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார்.. எனினும் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் விஜய் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. இதை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார்.. ஆனால் தன் மீதான வழக்குகள் பெரம்பூர் வேட்புமனுவில் எதுவும் குறிப்பிடாத விஜய் திருச்சி கிழக்கு வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது வயதையும் மாற்றி மாற்றி குறிப்பிட்டுள்ளார்.. கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் தாக்கல் செய்த விஜய் தனது வயதை 52 என்று குறிப்பிட்டுள்ளார்.. கடந்த 3-ம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது வயது 51 என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.. குற்ற வழக்கு, வயது தொடர்பான விவரங்களை விஜய் மாற்றி மாற்றி குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.. பெரம்பூர், திருச்சி கிழக்கு மாறுபட்ட தகவல்களை தெரிவித்திருப்பதால் விஜய்யின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து கடந்த 4-ம் தேதி பெரம்பூர் தொகுதிக்கான திருத்தப்பட்ட கூடுதல் மனுவை விஜய் தாக்கல் செய்தார்.. அதாவது விடுபட்ட கூடுதல் தகவலை ஒரு Supplementary/ Additional Affidavit ஆக மீண்டும் தாக்கல் செய்தார்.. அதில் விஜய் மீதான வழக்குகள் குறித்த விவரங்கள் சேர்க்கப்பட்டது.. மேலும் விஜய் பெயரில் ரூ.6 கோடி மதிப்பிலான பிரச்சார வாகனம் பற்றிய தகவல்கள் சேர்க்கப்பட்டன.. விஜய்யின் வயது தொடர்பான விவரங்களும் சேர்க்கப்பட்டன..
இந்த நிலையில் இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.. விஜய் வேட்புமனுவை பரிசீலனை செய்த தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.. விஜய் தாக்கல் செய்த அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.. எனினும் பலமுறை திருத்தம் செய்து தாக்கல் செய்யப்பட்ட விஜய் வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.. எனினும் காவல்துறையினர் வந்து திமுகவினரிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்..
அதே போல் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியிலும் விஜய் தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டது.. பெரம்பூரை போலவே திருச்சி கிழக்கு தொகுதியிலும் வயது , வழக்கு தொடர்பாக மனு திருத்தப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரின் மனு ஏற்கப்பட்டது..
Read More : “விஜய் ஒரு சுயநலவாதி.. மேடைகளில் கேப்டன் பெயரை பயன்படுத்திக் கொள்கிறார்..” விளாசிய விஜய பிரபாகரன்..!



