10 ஆம் வகுப்பு தகுதி தான்.. மத்திய சுங்கத்துறையில் வேலை.. ரூ. 63,200 சம்பளம்..! செம அறிவிப்பு..

Govt Job 2025

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுங்கத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் குரூப் ‘C’ பிரிவின் கீழ் டிரேட்ஸ்மேன் (Tradesman), சீமேன் (Seaman), கிரேசர் (Greaser) உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேடப்படுகின்றனர்.


கல்வித்தகுதி: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ (ITI) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பெறலாம். அதற்காக சென்னை கஸ்டம்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennaicustoms.gov.in லிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து, குறிப்பிடப்பட்ட அலுவலக முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 30.04.2026 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

Read more: இந்த நாட்டில் ஒரு கப் தேநீரின் விலை 20 ஆயிரம்! ஒரு வேளை உணவின் விலை 1 லட்சம்; ஆனால், இது உலகின் மிக மலிவான நாடு..!

English Summary

A new announcement has been issued to fill vacant positions in the Customs Department.

Next Post

“நடிகர்கள் பின்னால் போகாதீங்க.. உங்களுக்கு தான் ஆபத்து..” இளைஞர்களுக்கு ரஜினி அட்வைஸ்..!

Wed Apr 8 , 2026
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.. அப்போது அவரிடம் செய்தியாளர்கள், இன்றைய காலக்கட்டத்தில் நடிகர்கள் பின்னால் சென்று விபத்தில் சிக்கும் தமிழக இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன என்று கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் “ இளைஞர்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. நடிகர்கள் பின்னால் சென்று கீழே விழுந்து காயம்பட்டால் உங்களுக்கு தான் ஆபத்து.. படிக்க வேண்டிய வயத்தில் படிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்த […]
Rajinikanth 7

You May Like