போஸ்ட் ஆபீசில் ரூ. 3500 முதலீடு செய்தால் 2.50 லட்சம் ரிட்டன் கிடைக்கும்.. அருமையான RD திட்டம்!

w 1280h 720imgid 01jde7kefnz8rs5dbdzwtds8wqimgname tamil news 2024 11 24t100843.526

இந்தியாவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் முக்கிய அமைப்பாக அஞ்சல் திட்டம் திகழ்கிறது. சேமிப்பு கணக்குகள் மட்டுமின்றி, தொடர் வைப்பு (RD), பொது நல நிதி (PPF), கிசான் விகாஸ் பத்ரா (KVP), காலவரையறை வைப்பு (TD), மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) உள்ளிட்ட பல்வேறு சேமிப்பு திட்டங்களையும் தபால் நிலையங்கள் வழங்குகின்றன.


அவற்றில் முக்கியமாக கருதப்படும் திட்டம் தான் Recurring Deposit (RD). இது மாதந்தோறும் ஒரு நிரந்தர தொகையை சேமிக்க உதவும் திட்டமாகும். வங்கிகளைப் போலவே, தபால் நிலையங்களிலும் RD கணக்குகளை எளிதாகத் திறக்கலாம். தற்போது தபால் நிலைய RD திட்டத்தில் 6.7% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.100 முதல் சேமிக்க தொடங்கலாம்.

அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லாததால், ஒருவர் தனது வசதிக்கு ஏற்ப மாதாந்திர தொகையை நிர்ணயித்து சேமிக்க முடியும். எனினும், RD கணக்கைத் திறக்க தபால் நிலைய சேமிப்பு கணக்கு அவசியமாகும். இந்த திட்டத்தின் கீழ் சேமிப்பாளர்களுக்கு கடன் பெறும் வாய்ப்பும் உள்ளது. கணக்கு திறந்த பின்னர் குறைந்தபட்சம் 12 மாதங்கள் தொடர்ந்து தொகை செலுத்தியவர்களுக்கு கடன் பெற தகுதி கிடைக்கும். சேமித்துள்ள மொத்தத் தொகையின் 50% வரை கடனாக பெறலாம்.

இந்தக் கடனை ஒரே தொகையாகவோ அல்லது தவணைகளாகவோ திருப்பிச் செலுத்தும் வசதி உள்ளது. தபால் நிலைய RD திட்டம் 5 ஆண்டுகள் (60 மாதங்கள்) காலத்தில் முதிர்ச்சி அடைகிறது. அதன்பிறகும், விருப்பமிருந்தால் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம். உதாரணமாக மாதந்தோறும் ரூ. 3,500 சேமித்தால், 60 மாதங்களில் மொத்தமாக ரூ. 2,10,000 முதலீடு செய்யப்படும். இதற்கு ரூ. 39,776 வட்டி சேர்த்து, மொத்தமாக ரூ. 2,49,776 முதிர்ச்சியின்போது கிடைக்கும்.

குறைந்த அபாயம், அரசு பாதுகாப்பு, நிலையான வட்டி, சிறிய தொகையிலேயே தொடங்கும் வசதி போன்ற காரணங்களால் தபால் நிலைய RD திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக மாத சம்பளம் பெறுபவர்கள் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக திட்டமிட்டு சேமிக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. முடிவாக, ஒழுங்கான சேமிப்பு பழக்கத்துடன், உறுதியான வருமானத்தைப் பெற விரும்புபவர்களுக்கு தபால் நிலைய RD திட்டம் ஒரு நம்பகமான முதலீட்டு வழியாக திகழ்கிறது.

Read more: “என்னை எதிர்ப்பவர்களால் இதை தைரியமா, கெத்தா சொல்ல முடியுமா..? திமுக, அதிமுகவுக்கு விஜய் சவால்..!

English Summary

If you invest Rs. 3500 in the post office, you will get a return of 2.50 lakhs.. A great RD scheme!

Next Post

“ஈரானில் இருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ வெளியேறுங்க..” இந்தியர்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு..! அவரச உதவி எண்கள் அறிவிப்பு..!

Wed Apr 8 , 2026
ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையில் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தியக் குடிமக்கள் ஈரான் நாட்டை விட்டு விரைவாக வெளியேறுமாறு அவசர அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. குடிமக்கள் அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பாதுகாப்பான வெளியேற்றத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட பிரத்யேக வழிகளை […]
iran war indians

You May Like