சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் எதிரொலியாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 15ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரையில் நாளை பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 16, 17ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும்.
ஆகஸ்ட் 18ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யும்.
ஆகஸ்ட் 19ம் தேதி தேனி, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 20ம் தேதி தேனி, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை / இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Read More : கோவை என்ன பாகிஸ்தானிலா இருக்கு..? தேசியக்கொடி ஏந்தி பேரணி செல்வது பாவச்செயலா? தவெக அரசை விளாசிய ஐகோர்ட்..!!



