“பேசிட்டு இருக்கேன்ல, கீழே இறங்கு..” இளைஞர் கன்னத்தில் பளார்-ன்னு அறைந்த திருமா..! வைரல் வீடியோ..!

thiruma slap

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. பெரியகுளம் தனி சட்டமன்ற தொகுதியில் சக்திவேல் என்பவர் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்..


அவருக்கு ஆதவராக திருமாவளவன் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. அப்போது அவரின் பிரச்சார வாகனத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சில மது போதையில் வாகனத்தில் ஏறி அவரை பேச விடாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர்.. அப்போது விசிக தலைவர் திருமாவளவன் கீழே இறங்குமாறு பலமுறை கூறியும் அவரின் பேச்சை அவர்கள் கேட்கவில்லை.. தொடர்ந்து வாகனத்தில் ஏறி அவரை பேச விடாமல் ரகளையில் ஈடுபட்டனர்.. மேலும் இளைஞர் ஒருவர் திருமா உடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று அவரின் வாகனத்தில் ஏற முயன்றதாக தெரிகிறது..

இதனால் ஆத்திரம் அடைந்த திருமாவளவன் ஒரு கட்டத்தில் வாகனத்தில் ஏற முயன்ற இளைஞரை கன்னத்தில் அறைந்து கீழே இறங்குமாறு கண்டித்தார்.. பேசுவதை கேட்காமல் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டியதால் ஆவேசமடைந்த திருமா அந்த இளைஞரை அடித்ததாக கூறப்படுகிறது.. மேலும் ‘பேசிட்டு இருக்கேன்ல, கீழே இறங்கு..” என்று கோபமாக கூறினார்.. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.. பின்னர் விசிக நிர்வாகிகள் நிலைமையமை கட்டுக் கொண்டுவந்தனர்.. இதையடுத்து திருமா தனது பரப்புரையை முடித்தார்..

Read More : “முதல்வரை பற்றி தவறாக பேசவில்லை.. நான் சொன்னது இதுதான்..” சர்ச்சையான நிலையில் இபிஎஸ் விளக்கம்..!

RUPA

Next Post

254 பேர் பலி; 1,100 பேர் காயம்... போர் நிறுத்தத்திற்கு பிறகும் அடங்காத இஸ்ரேல்..! லெபனானில் தொடரும் தாக்குதல்..!

Thu Apr 9 , 2026
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் நிறுத்தம் நேற்று அமலுக்கு வந்தது.. 2 வாரத்திற்கு இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.. மேலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை அமெரிக்கா – ஈரான் இடையே மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.. ஆனால் ஈரான் மீதான போர் நிறுத்தம் தொடரும் என்றாலும், அந்த போர் நிறுத்தத்தில் லெபனான் விதிவிலக்கு என்று இஸ்ரேல் கூறியிருந்தது.. அதன்படி லெபனான் […]
lebanon attack israel iran war

You May Like