நீதிமன்றத்திற்கு வேறு வேலை இல்லையா..? திருப்பரங்குன்றம் மலை விவகாரம்.. நீதிபதிகள் காட்டம்..!

thiruparangunram madurai hc 1

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.. இதை தொடர்ந்து பல்வேறு மனுக்கள் இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்..


அந்த மனுவில் “ கடந்த ரமலான் பண்டிகையின் போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் சிறப்பு தொழுகை நடத்த இஸ்லாமியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.. ஆனால் அதே நேரத்தில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.. எனவே சிறப்பு தொழுகைக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது ஒழுங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.” என்று கூறியிருந்தார்..

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது அரசு தரப்பு “ மனு தாரர் உரிய ஆவணங்கள் மற்றும் தரவுகள் இல்லாமல் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து வருகிறார்.. அவருக்கு அதிகபட்ச அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர்..

அப்போது நீதிபதிகள் “ திருப்பரங்குன்றம் மலை பிரச்சனை மட்டும் தான் உள்ளது.. வேறு எந்த பிரச்சனைகளும் இல்லையா.? தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொடர்பாக மனு தாக்கல் செய்வது ஏன்? இதை தவிர நீதிமன்றத்திற்கு வேறு வேலை இல்லையா..? உரிய ஆவணங்கள், தரவுகள் இன்றி மனு தாக்கல் செய்ததால் மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படுகிறது.. மனுதாரர் இனி உரிய ஆய்வுகள், ஆவணங்கள் இல்லாமல் மனு தாக்கல் செய்ய மாட்டேன் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் அபராதம் நீக்கப்படும்..” என்று நீதிபதி தெரிவித்தார்.. மேலும் மனுதாரர் தொடர்ந்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்..

Read More : “பேசிட்டு இருக்கேன்ல, கீழே இறங்கு..” இளைஞர் கன்னத்தில் பளார்-ன்னு அறைந்த திருமா..! வைரல் வீடியோ..!

RUPA

Next Post

பழனிச்சாமிக்கு கொலை, கொள்ளை எல்லாம் புதிதல்ல.. 1979ல் நடந்தது நியாபகம் இருக்கா..? - ஆர்.எஸ்.பாரதி தாக்கு

Thu Apr 9 , 2026
Murder and robbery are not new to Palaniswami.. Is there any justice for that incident that happened in 1979..? - R.S. Bharathi
rs bharathi eps 1

You May Like