தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று திமுகவும், ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று அதிமுகவும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்..
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த தேர்தலில் முக்கிய அங்கமாக திகழ்கிறது.. தேர்தலில் முதன்முறை களமிறங்க உள்ள தவெக எந்த கட்சிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும், யாருடைய வாக்குகளை பிரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.. எனவே இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. சுமார் 8.5% வாக்கு வங்கியை வைத்திருக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது..
தமிழகத்தின் சில முக்கியத் தொகுதிகளின் பட்டியல் :
கொளத்தூர்
கொளத்தூர் தொகுதியில் 4-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுகிறார்.. சென்னை கொளத்தூர் தொகுதியில் 2011, 2021, 2021 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார்.. கொளத்தூர் தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது..
1989, 1996, 2001, 2006 தேர்தல்களில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் மு,க ஸ்டாலின் வெற்றி பெற்றார்.. இதுவரை 7 முறை தேர்தல் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
எடப்பாடி
தமிழகத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றாக எடப்பாடி தொகுதி திகழ்கிறது.. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதி இதுவாகும்.. அதிமுகவின் கோட்டையாகத் திகழும் இந்த தொகுதி, மாநிலத்தில் அக்கட்சி மீண்டும் எழுச்சி பெறுவதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
திருச்சி கிழக்கு
தவெக தலைவர் விஜய் இந்த தொகுதியில் போட்டியிடுவதால், இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு தொகுதியாகும்.. ஏற்கனவே இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துவரும் திமுகவின் இனிகோ இருதயராஜை எதிர்த்து விஜய் போட்டியிடுகிறார். இந்த முக்கிய சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் கே. ராஜசேகரனும் களத்தில் உள்ளார். தனது முதல் தேர்தல் களத்தில், விஜய் பெரம்பூர் தொகுதியிலிருந்தும் போட்டியிடுகிறார்.
ஆர்.கே. நகர்
ஒரு காலத்தில் அதிமுகவின் கோட்டையாகத் திகழ்ந்த இத்தொகுதி, தற்போது திமுகவின் மையமாக மாறியுள்ளது; இத்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ ஜே. ஜான் எபினேசர் ஆவார்.. 2015–16 காலக்கட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்த தொகுதியில் போட்டியிட்டார்.. வாக்கிற்குப் பணம்’ வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நிலையிலும், டி.டி.வி. தினகரன் ஒரு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கோவை தெற்கு:
இந்த தேர்தலில் முக்கிய தொகுதியாக கோவை தெற்கு உள்ளது. கடந்த முறை கரூரில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.. இந்த தேர்தலில் செந்தில் பாலாஜியை எதிர்த்து அதிமுக சார்பில் அம்மன் கே. அர்ஜுனன் களமிறங்குகிறார்..



