தமிழ்நாட்டில் கடந்த சில நாட்கள் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தெற்கு ஒடிசா முதல் மன்னார் வளைகுடா வரை தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது..
இந்த நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, பெரம்பலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..



