“உதயநிதி போட்டோ காட்டியதில் என்ன தவறு..? இபிஎஸ்-க்கு நன்றி இல்லை..” பொளந்து கட்டிய சசிகலா..!

Udhayanidhi sasikala

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. மேலும் சசிகலா – ராமதாஸ் அணியும் களத்தில் உள்ளது.. அ.இ.பு.த.ம.மு.க என்ற கட்சியை சார்பில் வேட்பாளர்களை அறிவித்த சசிகலா தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.


அந்த வகையில் நேற்று ராஜபாளையத்தில் அ.இ.பு.த.ம.மு.க வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. அப்போது உதயநிதி, ஸ்டாலின் குறித்த இபிஎஸ்-ன் விமர்சனங்கள் குறித்து சசிகலா காட்டமாக பேசினார்..

மேலும் “ துணை முதலமைச்சர் உதயநிதி சின்னப்பையன்.. அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி என் காலில் விழும் படத்தை காண்பித்து பேசுகிறார்.. இது கார்பெட் இல்ல.. இபிஎஸ் தான் என்று சொல்கிறார்.. அதற்கு முதலமைச்சராக இருந்தவர் (இபிஎஸ்) என்ன சொல்கிறார்..? உதயநிதி பால்டாயில் குடித்து படுத்துக் கிடந்ததாக சொல்கிறார்.. இது மக்களுக்கு தேவையான விஷயமா..? ஒரு பொறுப்புள்ள தலைவர் இந்த வயதில் இப்படி பேசலாமா?

இப்ப இருக்கும் முதலமைச்சரை கொரோனாவில் போயிருக்கணும் என்று சொல்கிறார்.. இதுவரை எத்தனையோ தலைவர்கள் முதலமைச்சராக இருந்தனர்.. எந்த தலைவரும் இவ்வளவு கேவலமாக பேசியதில்லை.. யாரும் இந்த மாதிரி எல்லாம் பேசமாட்டங்க.. இவர்கள் நல்ல தலைவர்கள் இல்லை.. இவர்கள் எப்படி மக்களை வழிநடத்துவார்கள்? வழிநடத்த முடியாது..

உதயநிதி காண்பித்த போட்டோ உண்மை தானே? இது டிவியில் அந்த விஷயம் தான்.. டிவியில் வந்த விஷயத்தை உதயநிதி காட்டினார்.. அதற்கு உதயநிதி உயிரோடு இருக்கக் கூடாது என்று இபிஎஸ் சொல்லக்கூடாது.. நீங்கள் உங்களை திருத்திக் கொண்டிருக்க வேண்டும்.. அதாவது பதவி கொடுத்தவருக்கு நன்றியுடன் இருந்திருக்க வேண்டும்.. வீட்டில் ஒரு நாய் வளர்த்தால், அதற்கு ஒரு பிஸ்கட் கொடுத்தால் கூட நன்றியுடன் இருக்கும்.. இபிஎஸ்-க்கு அந்த நன்றி கூட இல்லை.. நீங்கள் செய்ததை தான் அந்த பையன் (உதயநிதி) காட்டுகிறார். அவர் காட்டுவதில் என்ன தவறு..? ஒரு தவறும் இல்லையே நடந்ததை தான் அவர் காட்டுகிறார்..” என்று தெரிவித்தார்..

Read More : ”எதிரிகளோடு சேர்ந்து கூட்டு சதி செய்தார்.. அவரால் தான் தேர்தலில் தோற்றோம்..” ஓபிஎஸ்-ஐ விளாசிய இபிஎஸ்..!

RUPA

Next Post

Flash : குட்நியூஸ்.. தங்கம் விலை மீண்டும் அதிரடி குறைவு.. எவ்வளவு தெரியுமா..?

Sat Apr 11 , 2026
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
gold price prediction

You May Like