Flash : ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போயஸ் கார்டனில் போலீசார் குவிந்ததால் பரபரப்பு..!

rajinikanth dhanush

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.


மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், ஐஏஎஸ் அதிகாரிகள், இசைஞானி இளையராஜா என முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. எனினும் சோதனையில் அவை வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது..

இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது..  டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இ- மெயில் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. மோப்ப நாய் உதவியுடன் தேனாம்பேட்டை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இதனால் போயஸ் கார்டன் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது..

Read More : “ நடிகர் பின்னால் சென்று விபத்தில் சிக்கும் இளைஞர்கள் விரைவில் திருந்துவார்கள்..” விஜய் குறித்த கேள்விக்கு CM ஸ்டாலின் பதில்..!

RUPA

Next Post

இந்த காய்கறியை தினமும் சாப்பிட்டால் புற்றுநோயை தடுக்கலாம்.. இந்த உடல்நல பிரச்சனைகளும் குறையும்..!

Sat Apr 11 , 2026
பிரக்கோலி ஒரு சத்தான காய்கறி. இது நமது உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மிக முக்கியமாக, புற்றுநோய் அபாயத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவதில் பிரக்கோலி ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் தினமும் உண்ணும் காய்கறிகளில் பிரக்கோலிக்கு ஒரு தனி இடம் உண்டு. சந்தையில் பல வாடிக்கையாளர்களைக் கவரும் இந்தக் காய்கறிக்கு அதிக தேவை உள்ளது. எனவே, சமீபகாலமாக பல விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பிரக்கோலியை பயிரிடத் தொடங்கியுள்ளனர். செரிமானப் பிரச்சனைகளால் […]
cancer3 1 1

You May Like