Breaking : விஜய்யின் திருவள்ளூர் பரப்புரையும் ரத்து.. அடுத்தடுத்து ரத்தாகும் பிரச்சாரங்கள்.. இதுதான் காரணமா..?

TVK Vijay new

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..


ஆனால் விஜய் மட்டும் தனது தேர்தல் பரப்புரையை அடுத்தடுத்து ரத்து செய்து வருகிறார்.. கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் பெரம்பூரில் இருந்தே தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். ஆனால் அன்றைய தினம் வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு நீலாங்கரை வீட்டிற்கு விஜய் புறப்பட்டு சென்றார்.. போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்பதால் அந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது..

பின்னர் ஏப்ரல் 6-ம் தேதி போலீசார் அனுமதி கொடுத்தும் வில்லிவாக்கம், தி.நகர் பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்தார்.. அதே போல் ஏப்ரல் 7-ம் தேதி போலீசார் அனுமதி கொடுத்தும் சைதாப்பேட்டையில் நடைபெற இருந்த பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்தார்..

இதையடுத்து கடந்த 8-ம் தேதி நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று பிரச்சாரம் செய்தார்.. நேற்று காரைக்குடிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற விஜய் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்னை திரும்பினார்..

அதே போல் கடந்த 9-ம் தேதி கடலூரில் பிரச்சார்ம் செய்ய விஜய்க்கு போலீசார் அனுமதி கொடுத்தனர்.. அந்த பிரச்சாரத்தை இன்றைக்கு ஒத்திவைத்தார் விஜய்.. இந்த சூழலில் கடலூரில் இன்று விஜய் பரப்புரை செய்யவிருந்தார்.. இதற்காக தேர்தல் ஆணையமும் காவல்துறையும் அனுமதி வழங்கிய நிலையில் இன்றைய கடலூர் பரப்புரை நேற்றிரவு திடீரென ரத்து செய்யப்பட்டது..

மேலும் கன்னியாகுமரியில் நாளை தவெக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விஜய் பரப்புரை செய்யவிருந்தார்.. ஆனால் இந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டு ரோட் ஷோ மட்டும் விஜய் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் வரும் 13-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பரப்புரை செய்ய அனுமதி கோரப்பட்டது.. இதற்காக பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறையும், தேர்தல் ஆணையமும் அனுமதி வழங்கி உள்ளது.. ஆனால் 13-ம் தேதி கும்மிடிப்பூண்டியில் நடைபெற இருந்த விஜய்யின் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது.. 13-ம் தேதிக்கு பதில் ஏப்ரல் 19-ம் தேதி விஜய் பரப்புரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

முதலில் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தவெக நிர்வாகிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.. ஆனால் தற்போது விஜய் கேட்கும் தேதி, கேட்கும் நேரத்தில் தேர்தல் ஆணையம் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கி வருகிறது.. ஆணையம், காவல்துறை என அனைவரும் அனுமதி கொடுத்தாலும், விஜய்யின் பிரச்சாரங்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.. ஆனால் பரப்புரை ரத்து செய்யப்படுவதற்கான காரணமோ அல்லது விளக்கமோ தவெக தரப்பில் இருந்து வெளியிடப்படுவதில்லை.. ஒரு நாள் பிரச்சாரம் என்றால் மறு நாள் ஓய்வு என்ற அடிப்படையில் விஜய் பரப்புரை செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது..

Read More : Flash : அடுத்த 10 நாட்களுக்கு வீடு வீடாக போங்க.. வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க.. தவெக தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ் ..

RUPA

Next Post

7 கோடி PF பயனர்களுக்கு குட்நியூஸ்.. இனி நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் சேவைகளை பெறலாம்..!

Sat Apr 11 , 2026
EPFO சேவைகளை மேலும் மேம்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, PF கோரிக்கை செயல்முறை மேலும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 7 கோடிக்கும் அதிகமான PF கணக்குதாரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எளிதான மற்றும் விரைவான சேவைகளை வழங்குவதற்காக, டிஜிட்டல் தளங்களை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் EPFO 3.0 அமைப்பை அறிமுகப்படுத்தத் தயாராகி […]
epfo 1

You May Like