UPIஇல் கட்டணமின்றி எவ்வளவு வரை பணம் அனுப்பலாம்..? இவர்களுக்கு முழு விலக்கு..!! மத்திய அரசு திடீர் உத்தரவு..!!

UPI Loan

யுபிஐ (UPI) மற்றும் ரூபே (RuPay) டெபிட் கார்டுகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் ரூ.2,000 வரையிலான பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று சேவை வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யுபிஐ அல்லது ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி மக்கள் ரூ.2,000 அல்லது அதற்கும் குறைவாக மேற்கொள்ளும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளோ அல்லது நிதி அமைப்புகளோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவொரு கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கத் தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், ரூ.2,000-க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுமா என்பது குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக எதையும் குறிப்பிடவில்லை. கடந்த ஆகஸ்ட் 13-ல் நிறைவடைந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், ‘வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா 2026’-ன் கீழ் இதற்கான சட்டப்பிரிவு திருத்தப்பட்டது. இதுகுறித்து தேசிய கொடுப்பனவுக் கழகம் தலைமையிலான வழிகாட்டுதல் குழு பரிசீலித்து முடிவெடுக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : மதுவில் விஷமா? மூக்கு, கண்களில் வடிந்த ரத்தம்..! கருவேலங்காட்டுக்குள் இரட்டை கொலை? ராமநாதபுரத்தில் மர்ம சம்பவம்..!

Next Post

தண்ணீர் தொட்டிக்குள் மிதந்த சங்கிலி முருகன்..! பெற்ற மகளை சீண்டியதால் வெறிச்செயல்..! திண்டுக்கல்லில் திடுக்கிடும் சம்பவம்..!

Tue Sep 15 , 2026
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் மாயமானதாக புகாரளிக்கப்பட்ட நபர், இளம்பெண்ணை கேலி செய்த விவகாரத்தில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு, மதுரை அருகே உள்ள குடிநீர் தொட்டியில் சடலமாக வீசப்பட்ட பயங்கர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் சங்கிலி முருகன் (38). இவர் கடந்த 10-ஆம் தேதி முதல் திடீரென மாயமானதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் செம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் […]
crime 3f6b549e48 1

You May Like