தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் புதிதாக கட்சி தொடங்கி தேர்தலில் களமிறங்கி உள்ள விஜய், போலீசார் அனுமதி அளித்த பரப்புரை கூட்டங்களையும் ரத்து செய்து வருகிறார்.. அந்த வகையில் நேற்று காரைக்குடிக்கு பரப்புரைக்கு சென்ற விஜய் ரோடு ஷோ சென்றுவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்னை திரும்பினார்..
இந்த நிலையில் விஜய்யின் நேற்றைய ரோடு ஷோவை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ நேற்று ஜோசப் விஜய் காரைக்குடியில் ரோடு ஷோ செய்தார்.. அப்போது சைக்கிள் ஓட்டியதாகவும், கை காட்டிக் கொண்டே, ஆடிக்கொண்டே வந்ததாக சொன்னார்கள்.. எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகி விட முடியாது.. எல்லோராலும் ஜெயலலிதா ஆகிவிட முடியாது.. அதற்காக கொள்கைகள் வேண்டும், அமைப்பு வேண்டும்.. இயற்கையான உணர்வு வேண்டும்.. திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த விஜய் தனியாக கட்சி தொடங்கி உள்ளார்..
என்னை பொறுத்தவரை விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கணவனாக இருக்க வேண்டும்.. திமுகவை ஜெயிக்க வைக்கவே விஜய் வந்திருக்கிறார்.. விஜய் நேற்று சைக்கிள் ஓட்டியது வேடிக்கையாக இருந்தது.. திமுகவை ஓட்ட வேண்டும்.. சைக்கிள் ஓட்டவா விஜய் வந்தார்.. இதெல்லாம் ஒரு கேலிக்கூத்தான விஷயமாக உள்ளது..
தமிழக மக்கள் இதுவரை நடந்த எல்லா தேர்தல்களிலும் யார் ஆட்சிக்கு வர வேண்டும்.. யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒருமித்த கருத்தோடு தான் வாக்களித்துள்ளனர்.. தொடர்ந்து 2 முறை திமுக ஆட்சிக்கு வந்ததில்லை.. இனிமேலும் வராது..
மக்கள் ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணி பக்கமும் மோடி பக்கமும் இபிஎஸ் பக்கமும் இருக்கிறது.. கஞ்சா இல்லாத தமிழகம், பெண்கள் கண்ணீர் வடிக்காத தமிழகத்தை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.. இந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிரான மனப்பான்மை அதிகமாக இருக்கிறது.. எல்லா இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்..” என்று தெரிவித்தார்..
நயினார் நாகேந்திரன் ஏற்கனவே விஜய் முதலில் த்ரிஷாவை விட்டு வர வேண்டும் என்று பேசியிருந்தார்.. அவரின் பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோரினார்.. இந்த சூழலில் விஜய் நல்ல கணவனாக இருக்க வேண்டும் என்று கூறி மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளார்..



