பிரபல பாடகி ஆஷா போன்ஸ்லே மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இசை வரலாற்றில் அதிக பாடல்களை பாடியவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தவர் ஆஷா போஸ்லே. தமிழில் இளையராஜா இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். 20க்கும் மேற்பட்ட மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழில் ஹேராம் படத்தில் இடம்பெற்ற ‘நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி’, ‘அலைபாயுதே’ படத்தில் ‘செப்டம்பர் மாதம்’, ‘சந்திரமுகி’ படத்தில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
2 தேசிய விருதுகள், தாதா சாகேப் பால்கே, பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆஷா போஸ்லே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 93.
அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவரது இல்லத்தில் வைக்கப்படும், மேலும் இறுதிச் சடங்குகள் மாலை 4 மணிக்கு சிவாஜி பூங்காவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
Read more: தவெகவில் கருப்பு ஆடு.. பணம் வாங்கி கொண்டு துரோகம் செய்துவிட்டார்..! மனம் நொந்து பேசிய ஆதவ் அர்ஜூனா..



