தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் புதிதாக கட்சி தொடங்கி தேர்தலில் களமிறங்கி உள்ள விஜய், போலீசார் அனுமதி அளித்த பரப்புரை கூட்டங்களையும் ரத்து செய்து வருகிறார்.. அந்த வகையில் நேற்று முன்தினம் காரைக்குடிக்கு பரப்புரைக்கு சென்ற விஜய் ரோடு ஷோ சென்றுவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்னை திரும்பினார்.
இதனிடையே தவெகவின் உட்கட்சி விவகாரங்கள் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்குள் இதனைச் சரிசெய்ய, சென்னையில் அவசர ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவெக வேட்பாளர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற புகார் தலைமையிடம் எழுந்துள்ளது.
பல தொகுதிகளில் நிர்வாகிகள் தேர்தல் களப்பணிகளில் தீவிரம் காட்டாமல் இருப்பதும், வேட்பாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததும் விஜய்யை அதிருப்தியடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற ‘தாஜ்’ ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் தவெக மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் என சுமார் 800 பேர் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் விஜய் நேரடியாகத் தலைமையேற்று, தேர்தல் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து ஒவ்வொரு நிர்வாகியிடமும் தனித்தனியாக விளக்கம் கேட்கவுள்ளார்.
Read more: Weight Loss: தினமும் நடைப்பயிற்சி செய்தும் ரிசல்ட் இல்லையா..? நீங்க செய்ற இந்த தவறு தான் காரணம்..!



