தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 6-ம் தேதியுடன் நிறைவடைந்தது..
இந்த தேர்தலுக்காக சுமார் 7500 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பெரும்பாலான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.. எனினும் சரியாக பூர்த்தி செய்யப்படாத வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.. வேட்புமனு பரிசீலனை முடிந்த நிலையில், தற்போது 4610 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்..
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் இந்த தேர்தலில் விஜய்யின் தவெகவும் களமிறங்கி உள்ளது.. விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தேர்தலை ஒட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.. புதுச்சேரி எல்லையில் உள்ள மதுபானக் கடைகளையும் ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 நள்ளிரவு வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.. அதே போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் இயங்காது.. எனவே தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டில் மொத்தம் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More : “பதவி கொடுத்த சசிகலாவுக்கே துரோகம் செய்தவர் இபிஎஸ்..” விளாசிய கனிமொழி..!



