JOB: ரூ. 38,000 சம்பளத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை.. எழுத்து தேர்வு கிடையாது..!

job 2

தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனமான மெட்ராஸ் யுனிவர்சிட்டி மருத்துவ மரபியல் துறையில் புதிய ஆராய்ச்சி திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்காக தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


“குழந்தைகளில் காணப்படும் அரிய மரபணு நோய்கள்” குறித்த ஆய்வை முன்னெடுக்க, ‘புராஜெக்ட் அசோசியேட் – 1’ பதவிக்கான ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.

கல்வித் தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் உயிரி மருத்துவ மரபியல் (BioMedical Genetics) துறையில் முதுகலை (M.Sc.) பட்டம் பெற்றிருக்க வேண்டும். மரபணு ஆய்வில் அனுபவம் மற்றும் தொழில்நுட்ப திறன் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு:

பொதுப்பிரிவு: 27 வயது வரை

பெண்கள்: 5 ஆண்டுகள் தளர்வு

SC / ST / மாற்றுத்திறனாளிகள்: 5 ஆண்டுகள் தளர்வு

OBC: 3 ஆண்டுகள் தளர்வு

சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.31,000 அடிப்படை ஊதியமாக வழங்கப்படும். இதற்கு கூடுதலாக 24% வீட்டு வாடகை படி (HRA) வழங்கப்படுவதால், மொத்த சம்பளம் சுமார் ரூ.38,440 வரை கிடைக்கும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நேர்காணல் தகவல் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து, தரமணி வளாகத்தில் உள்ள மரபியல் துறைத் தலைவர் ஏ.கே.முனிராஜன் அவர்களுக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

கடைசி தேதி: ஏப்ரல் 25, 2026.

Read more: LIC-யில் முதலீடு செய்வோருக்கு ஜாக்பாட்..! ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்..!

English Summary

JOB: Rs. 38,000 salary job at Chennai University.. No written exam..!

Next Post

Breaking : ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000..! 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்.. பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

Tue Apr 14 , 2026
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டது.. பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பாஜகவினர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.. பாஜகவின் […]
bjp election manifesto

You May Like