Breaking : ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000..! 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்.. பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

bjp election manifesto

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டது.. பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பாஜகவினர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்..


பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள்

அனைத்து குடும்பத்திற்கும் ஒரு முறை ரூ.10,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 ரூபாய் வழங்கப்படும்.

முருகப்பெருமானை போற்றும் வகையில் தைப்பூச திருவிழா மாநில விழாவாக கொண்டாடப்படும்.

தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்புக்காக சிறு குறு விவசாயிகளுக்காக ரூ.50,000 மானியம் வழங்கப்படும்.

தமிழக திருத்தல யாத்திரை திட்டத்தில் உள்ளூர் மக்களுக்கு தரிசன நேரம் ஒதுக்கப்படும்.

சென்னை – பெங்களூரு, சென்னை – ஹைதராபாத் இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.

பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி என ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்..

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் பாரம்பரிய நடைமுறை பின்பற்றப்படும்.

மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு தகுதியுள்ள மகளிருக்கு ரூ.25,000 மானியம் வழங்கப்படும்.

மத்திய அரசின் நிர்பயா நிதி சிறந்த முறையில் முழுமையாக பயன்படுத்துவது உறுதி செய்யப்படும்

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்

திருத்தல பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் தென் தமிழக திருத்தல் யாத்திரை திட்டம் செயல்படுத்தப்படும்.

1 லட்சம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

Read More : பிரேமலதா நிற்காதது ஏன்..? கடலூர் பிரச்சாரத்தில் நடந்த விவகாரம்.. மெளனம் கலைத்த திருமாவளவன்..!

RUPA

Next Post

பெருங்கடலில் தங்க பொக்கிஷம்..! வியந்து போன விஞ்ஞானிகள்.. அசத்தல் கண்டுபிடிப்பு..!

Tue Apr 14 , 2026
தங்கம் என்பது பூமியின் மேற்பரப்பில் உள்ள சுரங்கங்களில் மட்டுமே கிடைக்கிறது என்று நாம் பொதுவாகக் கருதுகிறோம். ஆனால், பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில், இயற்கை ஒரு பிரம்மாண்டமான தங்கத் தொழிற்சாலையை இயக்கி வருவதாக விஞ்ஞானிகள் சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். ஆம், நீங்கள் கேட்டது சரிதான். பெருங்கடலில் தங்கம் இயற்கையாகவே எவ்வாறு உருவாகிறது என்ற ரகசியத்தை இந்த ஆய்வு வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. விஞ்ஞானிகளையே திகைக்க வைத்த அந்தப் பிரம்மாண்டமான செல்வத்தின் உண்மையான மதிப்பு எவ்வளவு […]
gold factory

You May Like