விஜய்யின் கடலூர் பிரச்சாரம் மீண்டும் ரத்து..! தேர்தல் நெருங்கும் நிலையில் ரத்தானதால் தவெகவினர் அதிர்ச்சி..!

tvk vijay n

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..


ஆனால் விஜய் மட்டும் தனது தேர்தல் பரப்புரையை அடுத்தடுத்து ரத்து செய்து வருகிறார்.. கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் பெரம்பூரில் இருந்தே தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். ஆனால் அன்றைய தினம் வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு நீலாங்கரை வீட்டிற்கு விஜய் புறப்பட்டு சென்றார்.. போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்பதால் அந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது..

இதையடுத்து கடலூர், திருவள்ளூர் என அடுத்தடுத்து பிரச்சாரங்கள் ரத்து செய்யப்பட்டது.. மேலும் 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் ரோடு ஷோ ஈடுபட்ட அவர் முழுமையாக செல்லாமல் பாதியிலேயே ரத்து செய்துவிட்டார்..

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் நாளை கடலூரில் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.. ரோடு ஷோவிற்கு அனுமதி வழங்கப்படாததால் நாளைய பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தவெக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9, 11 ஆகிய தேதிகளில் பரப்புரை செய்ய காவல்துறை அனுமதி வழங்கியும் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.. இந்த சூழலில் நாளை நடைபெற இருந்த விஜய்யின் கடலூரில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் செய்ய 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் விஜய்யின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தவெகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

முதலில் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தவெக நிர்வாகிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.. ஆனால் தற்போது விஜய் கேட்கும் தேதி, கேட்கும் நேரத்தில் தேர்தல் ஆணையம் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கி வருகிறது.. ஆணையம், காவல்துறை என அனைவரும் அனுமதி கொடுத்தாலும், விஜய்யின் பிரச்சாரங்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.. ஆனால் பரப்புரை ரத்து செய்யப்படுவதற்கான காரணமோ அல்லது விளக்கமோ தவெக தரப்பில் இருந்து வெளியிடப்படுவதில்லை.. ஒரு நாள் பிரச்சாரம் என்றால் மறு நாள் ஓய்வு என்ற அடிப்படையில் விஜய் பரப்புரை செய்கிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

Read More : “நாக்கு இருக்குன்னு பேசாதீங்க.. அசிங்கமா போயிடும்..” செங்கோட்டையனுக்கு இபிஎஸ் எச்சரிக்கை..!

RUPA

Next Post

"நாக்கு இருக்குன்னு பேசாதீங்க.. அசிங்கமா போயிடும்.." செங்கோட்டையனுக்கு இபிஎஸ் எச்சரிக்கை..!

Sat Apr 18 , 2026
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்தார்.. மேலும் ” செங்கோட்டையன் மிகவும் திமிர் பிடித்தவர்.. அதிமுகவினர் நல்ல சட்டை போட்டால் கூட செங்கோட்டையனுக்கு பிடிக்காது.. அவர் மோசமான குணம் கொண்டவர்.. செங்கோட்டையன் […]
sengottaiyan eps

You May Like