fbpx

Canada: கரை ஒதுங்கிய குப்பையில் கிடைத்த அதிசயம்!… 8 மாதங்களுக்கு பிறகு தொலைந்த பொருள் கிடைத்ததால் நெகிழ்ச்சி!

Canada: கடலில் தொலைத்த பணப்பை 8 மாதங்களுக்கு பிறகு கரை ஒதுங்கிய குப்பையுடன் கிடைத்ததால் இளம்பெண் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

கொலம்பியாவில் டோபினோவுக்கு அருகில் உள்ள தீவில் வசித்து வருபவர் மார்சி கால்வேர்ட்டு. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் படகில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகத் தனது பணப்பையைக் கடலில் தவறவிட்டுள்ளார். அந்த பையில் முக்கிய ஆவணங்கள், கார்டுகள் மற்றும் பணம் இருந்ததால் நீச்சல் தெரிந்த நபர்கள் மூலம் கடற்பகுதியில் தேடியுள்ளார். ஆனால் அவர் தொலைத்த பணப்பை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் தனது செல்லப்பிராணியைக் கடற்கரை பகுதியில் அழைத்துச்சென்றுள்ளார். அப்போது கரை ஒதுங்கிய குப்பைகளுடன் தான் கடலில் தொலைத்த பணப்பையும் கிடைத்துள்ளது. 8 மாதங்களுக்குப் பிறகு தான் தொலைத்த பொருள் கிடைத்ததால் இளம்பெண் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உப்புடன் கூடிய எனது பணப்பையை மீட்டுள்ளேன். எந்த வித சேதமும் ஏற்படவில்லை. தற்போதுதான் மனநிறைவாக உணர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Readmore: விளையாட்டாக தோண்டிய குழியில் விழுந்து 7 வயது சிறுமி மரணம்.! சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்.!

Kokila

Next Post

Vijay-க்கு அப்பாவாக நடித்த சியான் விக்ரமின் தந்தை..!! அட த்ரிஷாவுக்குமா..? சுவாரஸ்ய பின்னணி..!!

Sat Feb 24 , 2024
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் விக்ரம். ரசிகர்களால் ‘சியான்’ விக்ரம் என அழைக்கப்படுகிறார். பாலா இயக்கிய ‘சேது’ படத்தில் ‘சியான்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததால் அவருக்கு சியான் விக்ரம் என பெயர் வந்தது. விக்ரமின் மகன் துருவ், சினிமாவுக்குள் வந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரது தந்தையும் ஒரு நடிகர் தான் என்று பலருக்கும் தெரியாது. சினிமாவில் வளர்ச்சி அடைந்த நாளில் இருந்து விக்ரமின் முகத்தை மட்டுமே மக்கள் […]

You May Like