ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,300-க்கு விற்பனையாகிறது.. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1.14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனினும் இன்று வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து, ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.2.75 லட்சத்திற்கு விற்பனையாகிறது.. இன்று வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
Read More : வெறும் 1 ரூபாய்க்கு 24 காரட் தூய தங்கம்..! வியக்க வைக்கும் சலுகைகள்..! நீங்களும் இதை வாங்கலாம்..!



