தமிழ்நாட்டில் நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ளது.. அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவடைகிறது.. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் ” அதிமுகவை உடைப்பதற்கு இன்றைய முதலமைச்சர் எத்தனை திட்டம் போட்டார்.. அதை எல்லாம் முறியடித்து தான் இன்று அதிமுகவும் பாமகவும் கூட்டணி வைத்திருகிறோம்.. எங்கள் கூட்டணியை தோற்கடிக்க ஸ்டாலினால் மட்டுமல்ல.. அவரின் அப்பா கருணாநிதி வந்தால் கூட முடியாது.
அம்மா இறந்த பின்னர் 2021 தேர்தலில் சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் வென்றோம்.. தமிழ்நாட்டில் வேண்டுமானால் ஸ்டாலின் ஆட்சியில் இருக்கலாம்.. ஆனால் சேலத்தில் ஆட்சியில் இருப்பது அஹ்டிமுக தான்.. அப்போதே நாங்கள் வென்றோம்.
ஆனால் இன்று மக்களிடத்தில் மிகப்பெரிய அவப்பெயரை திமுக சம்பாதித்துள்ளது.. இன்று திமுகவின் ஊழல் ஆட்சியை மக்கள் வெறுத்து ஒதுக்கி இருக்கின்றனர்..
இன்று தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் போராடி போராடி சலித்து போய் தேர்தலை சந்திக்க உள்ளனர்..
20 தொகுதிகளில் திமுக வெல்வதே ஆச்சர்யம்.. 2011-ல் நீங்கள் எதிர்க்கட்சியாகவே இருந்தீர்கள்..? 2011 முதல் 2021 திமுக எத்தனை தேர்தல்களில் திமுக தோல்வியடைந்தது..
கருணாநிதி இருக்கும் போதே உங்களால் எதிர்க்கட்சியாக வர முடியவில்லை.. ஆனால் 2021 தேர்தலில் அம்மா இல்லாத போதும் அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது..
ஆனால் இப்போது பலம் வாய்ந்த கூட்டணி அமைத்துவிட்டதாக திமுக கொக்கரிக்கிறது.. திமுக பலம் வாய்ந்த கூட்டணி கிடையாது.. 2021 தேர்தலில் எந்தெந்த கட்சிகள் இடம்பெற்றதோ அதே கூட்டணி நீடிக்கிறது..புதிதாக தேமுதிக மட்டும் தான் இணைந்துள்ளது.
ஆனால் திமுக கூட்டணியில் இணைந்த பிரேமலதாவும் அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்கிறார்.. ஏனெனில் உண்மை உறங்காது.. இன்று நம்மிடம் இருந்து எதிரிகளோடு போய் கூட்டணி சேர்ந்தாலும் பிரேமலதா நமக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.. அதற்கு நன்றி..” என்று தெரிவித்தார்..



