Flash : வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை..! எவ்வளவு உயர்ந்துள்ளது தெரியுமா..?

Gold prices

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 40 உயர்ந்து ரூ.14,240-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.240 உயர்ந்து , ரூ.1,13,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமில்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனையாகிறது.. 

Read More : டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு.. 10 நிமிடங்களுக்கு முன்பு, தனது குடும்பத்தினருக்கு கொள்கை விளக்க அறிக்கையை அனுப்பிய துப்பாகிதாரி..!

RUPA

Next Post

ஹால்மார்க் முத்திரையை மட்டும் நம்பி தங்கம் வாங்காதீங்க.. HUID குறியீடு கட்டாயம்.. இல்லைனா நஷ்டம்தான்!

Mon Apr 27 , 2026
The New Gold Scam Nobody Notices Until It's Too Late
Jewellery 1

You May Like