தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவியது.. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட போட்டியாளர்களில் ஒன்றாக இருந்தனர்.
தேர்தல் முடிவுகள் எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னாள் திரைப்பட நடிகர் விஜய் தனது பொது வாழ்வில் ஒரு “முடிவெடுக்கும் கட்டத்திற்குள்” நுழைவதாகவும், அவரது அரசியல் பிரவேசம் தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஜோதிடர் ஷெல்வி கே தாமோதரன் தெரிவித்துள்ளார்..
எனினும் விஜய்யோ அல்லது தவெகவின் எந்தப் பிரதிநிதியோ இந்தக் கூற்றுகளுக்குப் பதிலளிக்கவோ அல்லது ஜோதிடரின் கருத்துக்கள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவோ இல்லை.
“நீச்ச பங்க ராஜ யோகம்” எனப்படும் கிரக அமைப்பில் விஜய் இருப்பதாக ஷெல்வி கூறியுள்ளார்.. விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், விஜய்யின் மக்கள் செல்வாக்கு வலுவான வாக்கு சதவீதமாக மாறக்கூடும் என்றும் அவர் கூறினார்.
தமிழக வெற்றி கழகத்தை (TVK) நிறுவிய விஜய், முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். தற்போது வாக்குப்பதிவு முடிவடைந்து, மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் தேர்தல் அரசியல் பிரவேசம் இருக்குமா என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது..
எம்.ஜி.ஆர், எம். கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் போன்ற மாபெரும் தமிழ் அரசியல் ஆளுமைகளின் மக்கள் செல்வாக்கை போலவே விஜய்க்கு மக்கள் செல்வாக்கு உள்ளது..
மேலும் போதுமான முன்னெச்சரிக்கைகள் இல்லாமல், விஜய்யை சுற்றியுள்ள பொதுக்கூட்டங்கள் “இயற்கைக்கு மாறான மரணங்களுக்கு” வழிவகுக்கும் என்று ஜோதிடர் ஷெல்வி குறிப்பிட்டார். இதுபோன்ற அபாயங்களைக் குறைக்க, திறந்தவெளி சாலைப் பேரணிகளுக்குப் பதிலாக, குறிப்பிட்ட இடங்களில் திட்டமிடப்பட்ட கூட்டங்களை தேர்ந்தெடுக்குமாறு அவர் ஏற்கனவே விஜய்க்கு அறிவுறுத்தி இருந்தார்..
தேர்தல் முடிவுகளில் விஜய் முன்னணி போட்டியாளர்களில் ஒருவராக உருவெடுக்கக்கூடும் என்றும், அவர் ஒரு முக்கிய இடத்தைக்கூடப் பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் ஷெல்வி குறிப்பிட்டுள்ளார்.. மாநிலத்தில் தற்போது நிலவிவரும் திமுக ஆட்சி மீதான அதிருப்தி’ (anti-incumbency) அலையை சுட்டிக்காட்டிய அவர், இதன் மூலம் விஜயின் கட்சியும் பிற எதிர்க்கட்சிகளும் பயனடையக்கூடும் என்று கருத்து தெரிவித்தார்.
தற்போது வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.. எனவே, ஷெல்வியின் கணிப்புகள் இறுதித் தேர்தல் முடிவுகளுடன் எந்தளவுக்குப் ஒத்துப் போகின்றன என்பது வரும் நாட்களில் தெளிவாகத் தெரியும்.
எனினும், தேர்தல் முடிவுகள் என்பவை ஜோதிடக் கணிப்புகளைச் சார்ந்திருப்பதை விட, கூட்டணி கணக்கீடுகள், வாக்காளர்களின் மனநிலை மற்றும் கள அளவிலான கட்சி அமைப்பு போன்ற மிகவும் சிக்கலான காரணிகளையே சார்ந்திருக்கின்றன என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்..



