fbpx

ICU-வில் சிகிச்சை பெறும் இளம்பெண்..!! மயக்க ஊசி செலுத்தி பலாத்காரம் செய்த ஊழியர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட 24 வயது இளம்பெண்ணை அதிகாலையில் யாரும் இல்லாத போதும் மயக்க ஊசி செலுத்தி மருத்துவமனை ஊழியர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். இந்நிலையில், இளம்பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் தொற்று பிரச்சனையை சரிசெய்வதற்கான சிகிச்சைகள் அந்த இளம்பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வந்தது. அவர் படிப்படியாக குணமாகி வருகிறார். இந்நிலையில் தான் சம்பவத்தன்று அதிகாலையில் அந்த இளம்பெண் அட்மிட் செய்யப்பட்டுள்ள ஐசியூ அறையில் யாரும் இல்லை. அந்த சமயத்தில் மருத்துவமனை ஊழியர் சிராக் யாதவ் பணியில் இருந்துள்ளார். அப்போது சிராக் யாதவ் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் அந்த பெண்ணை தவறாக அணுகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட முயன்றுள்ளார். அப்போது பயந்துபோன சிராக் யாதவ் அவரது வாயை பொத்தி மயக்க ஊசி செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் மயங்கியுள்ளார்.

Read More : H.Raja | ‘தமிழ்நாட்டில் விரைவில் ஆட்சி மாற்றம்’..!! பிரதமர் முன்பு பரபரப்பை கிளப்பிய ஹெச்.ராஜா..!!

அதன்பிறகு சிராக் யாதவ் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மயக்கத்தில் இருந்து கண்விழித்த அந்த இளம்பெண் சம்பவம் குறித்து கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் முதற்கட்டமாக ஆய்வு செய்தனர். பின்னர், ஊழியர் சிராக் யாதவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

English Summary : Case Registered against Ward Boy for Allegedly Raping Female Patient inside ICU

Chella

Next Post

Aadhaar | ’ஆதாரை கையில் வைத்துக்கொண்டே இதை செய்யாமல் இருக்கீங்களா’..? உடனே வேலையை முடிங்க..!!

Wed Feb 28 , 2024
ஆதார் கார்டு என்பது இந்தியர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணம் ஆகும். அனைத்து வேலைகளுக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்நிலையில், ஆதார் கார்டுகளை வழங்கும் அரசு நிறுவனமான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆதாரில் உள்ள தனிநபர் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அதில், ஏதேனும் திருத்தம் இருந்தாலும் அதை […]

You May Like