Flash : குட்நியூஸ்..! ஒரே நாளில் ரூ.5,000 சரிவு..! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

gold price prediction

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி, தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.50 குறைந்து, ரூ.14,050-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது..

அதே போல் வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து, ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து, ரூ.2.65 லட்சத்திற்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : இந்த பேமெண்ட்களுக்கு UPI PIN தேவையில்லை..! முன்னணி வங்கியின் முக்கிய மாற்றங்கள்..!

RUPA

Next Post

இன்று முதல் 5 கிலோ மினி எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

Fri May 1 , 2026
5 Kg LPG Cylinder Price Hiked by Rs 261 From Today: Report
5KG GAS CYLINDER 1 1

You May Like