தமிழ்நாட்டில் முதல் வெற்றி..! மதுரை மேலூரில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி..!

vote counting 2

தமிழ்நாட்டில் கடந்த 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.. இந்த தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுகிறது..  


இந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.. காலை முதலே விஜய்யின் தவெக முன்னிலை வகித்து வருகிறது.. அதன்படி காலை 10 மணி நிலவரப்பட்டி தவெக 103 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.. அதிமுக 75 இடங்களிலும் திமுக 56 இடங்களிலும் முன்னிலை வகித்தது..

பிற்பகல் 12 மணி நிலவரப்படி தவெக 99 இடங்களிலும், அதிமுக 74 இடங்களிலும், திமுக 61 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.. மதியம் 12.30 மணி நிலவரப்படி 30% ஓட்டுகளே எண்ணப்பட்டுள்ளன.. மொத்தம் பதிவான 4.88 கோடி வாக்குகளில் இதுவரை 1.49 கோடி ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளன.. இன்னும் சுமார் 3 கோடிக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.. அதாவது மூன்றில் இரு பங்கு ஓட்டுகள் இன்னும் எண்ணப்பட உள்ளன..

இந்த நிலையில் மதுரை மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றார்.. அவர் 60080 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.. அதிமுக கோட்டையான மதுரை மேலூர் தொகுதியில் தவெக வாக்குகளை பிரித்ததால் அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது..

RUPA

Next Post

திருப்பதி சென்று வந்த கையோடு விஜய் வீட்டிற்கு சென்ற த்ரிஷா..! தீயாய் பரவும் வீடியோ..

Mon May 4 , 2026
TVK leads.. Trisha went to Vijay's house after going to Tirupati..!
trisha

You May Like