தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மதியம் 1 மணி வரை வெளியான முன்னிலை நிலவரங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் தேர்தல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. அந்த தகவலின்படி, தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளிலும், திமுக 62 தொகுதிகளிலும், அதிமுக 64 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் உள்ள 15 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் முன்னனியில் உள்ள நிலையில், விஜயின் குடும்பத்தினர் விசில் அடித்து கொண்டாடும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. இதற்கிடையே, நடிகர் விஜய்யின் இல்லத்திற்கு நடிகை த்ரிஷா வந்திருக்கிறார். வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் நடிகை த்ரிஷா நீலாங்கரை இல்லத்திற்கு வந்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை திரிஷா இன்று தனது 43-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவரது தரிசன வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதே நாளில் திரிஷா திருப்பதி தரிசனம் செய்தது, இணையத்தில் பேசுபொருளானது. திருப்பதி சென்று வந்த கையோடு விஜய் வீட்டிற்கு வருகை தந்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Read more: தமிழ்நாட்டில் முதல் வெற்றி..! மதுரை மேலூரில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி..!



